இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி

188
Seales, Holder return to WI squad for England

மேற்கிந்திய தீவுகள் அணி T20 உலகக் கிண்ணத்தின் நிறைவினை அடுத்து இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ள டெஸ்ட் தொடருக்கான தமது வீரர்கள் குழாத்தினை அறிவித்துள்ளது. 

>> தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர், புதிய பெயர் அறிவிப்பு

T20 உலகக் கிண்ணத்தின் பின்னர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது. அதன்படி இந்த டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கும் 15 பேர் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது 

கிரைக் பிராத்வைட் தலைமையிலான இந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரதி தலைவர் பொறுப்பு அல்சாரி ஜோசேப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டிருக்கும் அணி மூலம் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஜேய்டன் சீல்ஸ் ஆகியோர் மேற்கிந்திய தீவுகளுக்காக மீண்டும் ஆடும் வாய்ப்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது 

23 வயது துடுப்பாட்ட வீரரான மிக்கேல் லூயிஸ் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்திற்காக மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். லூயிஸ் அண்மையில் நிறைவடைந்த உள்ளூர் பருவத்தில் 48.71 என்கிற சராசரியோடு 682 ஓட்டங்கள் குவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது 

அதேநேரம் 19 வயது வேகப்பந்துவீச்சாளாரன இசாய் தொர்னேவும் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் தொடரில் அசத்தியமைக்காக டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றார். அவர் அண்மைய உள்ளூர் பருவ தொடரில் 31 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது 

மேற்கிந்திய தீவுகள்இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் 10ஆம் திகதி லோர்ட்ஸ் அரங்கில் ஆரம்பமாகவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

மேற்கிந்திய தீவுகள் குழாம் 

கிரைக் ப்ராத்வைட் (தலைவர்), அலீக் அதான்ஸி, ஜொசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், காவேம் ஹொட்ஜ், டெவின் இம்லாச், அல்சாரி ஜொசேப் (பிரதி தலைவர்), சாமர் ஜொசேப், மிக்கேல் லூயிஸ், சாச்சரி மெக்காஸ்கி, கிர்க் மெக்கன்ஸி, குடாகேஸ் மோட்டி, கேமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்கிளெய்ர் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<