தர்ஸ்ட்டன் கல்லூரிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தி வலுச்சேர்த்த நிபுன் லக்ஷான்

246

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 4 போட்டிகள் திங்கட்கிழமை (05) ஆரம்பமானதோடு மேலும் ஒரு போட்டி நிறைவடைந்தது.

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

மனீஷ ரூபசிங்கவின் அபார சதத்தின் மூலம் வலுவான நிலையை எட்டிய புனித தோமியர் கல்லூரி அணி வெற்றி எதிர்பார்ப்போடு முன்கூட்டியே முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.

புனித தோமியர் கல்லூரியின் சொந்த மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட புனித தோமியர் கல்லூரிக்காக மனீஷ ரூபசிங்க 133 ஓட்டங்களை பெற்றார். எனினும் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.  

டாக்கா டெஸ்ட்டில் சிறந்த ஆடுகளத்தை எதிர்பார்க்கும் கருணாரத்ன

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்திருக்கும் புனித பெனடிக்ட் கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது ஒரு விக்கெட்டை இழந்து 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்) – 230/6d (62.3) – மனீஷ ரூபசிங்க 133, டெலோன் பீரிஸ் 50, ப்ருத்வி ஜெகராஜசிங்கம் 2/35, மஹீஷ் தீக்ஷன 2/76

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 31/1 (16)


மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை எதிர் தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு

நிபுன் லக்ஷானின் அதிரடி பந்துவிச்சு மூலம் மொரட்டு மஹா வித்தியாலயத்தை 164 ஓட்டங்களுக்கு சுருட்டிய தர்ஸ்ட்டன் கல்லூரி தனது முதல் இன்னிங்சில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

மொரட்டு மஹா வித்தியாலய மைதானத்தில் அரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தர்ஸ்ட்டன் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மொரட்டு மஹா வித்தியாலயத்தின் ஏழு விக்கெட்டுகளை நிபுன் லக்ஷான் பதம்பார்த்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த தர்ஸ்ட்டன் கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 202 ஓட்டங்களை பெற்றுள்ளது. நிமேஷ் பெரேரா ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 164 (38.3) – ஜீவந்த பெர்னாண்டோ 50, நதித் விஷேந்திர 46, நிபுன் லக்ஷான் 7/61

தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 202/4 (50) – நிமேஷ் பெரேரா 78*, பன்சிலு டேஷான் 55, ஜீவந்த பெர்னாண்டோ 2/64


நாலந்த கல்லூரி, கொழும்பு எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு

நாலந்த கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடும் நாலந்த கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 230 ஓட்டங்களை பெற்றுள்ளது. முதல் நாள் ஆட்டம் 69 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் புனித பேதுரு கல்லூரி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது.

நாலந்த கல்லூரியின் சமிந்து விஜேசிங்க 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 203/7 (69) – சமிந்து விஜேசிங்க 46*, லக்ஷித்த ரசஞ்சன 40, ருசிரு டி சில்வா 22, டில்ஹார பொலகம்பல 21, பபசர ஹேரத் 2/14   


ஜனாதிபதி கல்லூரி, கோட்டை எதிர் புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை

பாணந்துறையில் நடைபெற்ற iப்போட்டியில் ஜனாதிபதி கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்சில் 65 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் அணியில் இணைந்த அதிரடி வீரர்

பாணந்துறையில் நடைபெறும் இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜனாதிபதி கல்லூரி 173 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த புனித ஜோன்ஸ் கல்லூரி, 138 ஓட்டங்களுக்கே சுருண்டது. இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ஜனாதிபதி கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி, கோட்டை (முதல் இன்னிங்ஸ்) – 173 (45) – ரிபாஸ் மவுரூப் 70, தினெத் நெலும்தெனிய 32, தமிந்து விக்ரமாரச்சி 4/36, அஷேன் டில்ஹார 3/40, சசித்த மனுப்ரிய 3/53

புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை (முதல் இன்னிங்ஸ்) – 138 (39.4) – ரெஷான் பெர்னாண்டோ 37, பிரவீன் சந்தமால் 28, அஷேன் டில்ஹார 21, ஹசிந்து பிரமுக்க 4/41, தனுல சமோத் 3/41

ஜனாதிபதி கல்லூரி, கோட்டை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 30/0 (6)  

நான்கு போட்டிகளினதும் இரண்டாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்


மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மஹாநாம, இசிபதன கல்லூரிகளுக்கு இடையிலான B குழு போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய மஹாநாம அணி 214 ஓட்டங்களை பெற்ற நிலையில், இசிபதன கல்லூரி ஹஷான் சந்தீப்பவின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் தனது முதல் இன்னிங்சில் 137 ஓட்டங்களுக்கே சுருண்டது. சந்தீப்ப 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மஹாநாம கல்லூரி கடைசி நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்    

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 214 (88.2) – பவன் ரத்னாயக்க 91, சொனால் தினுஷ 25, பிஷான் மெண்டிஸ் 23, மதுஷிக்க சதருவன் 4/67, அயன சிறிவர்தன 2/24, காலிக் அமத் 2/51

இசிபதன கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 137 (56.2) – தெவிந்து திக்வெல்ல 27, சஞ்சுல அபோவிக்ரம 22, காலிக் அமத் 21, ஹஷான் சந்தீப்ப 7/33  

மஹாநாம கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 80/4 (20.5) – பிஷான் மெண்டிஸ் 49, காலிக் அமத் 2/06, சஞ்சுல பண்டார 2/19

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது