காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆனந்த மற்றும் திரித்துவக் கல்லூரிகள்

220

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடாத்தப்படும் 2017/2018 பருவ காலத்திற்கான 19 வயதின் கீழ் டிவிஷன் 1 பாடசாலைகளுக்கிடையிலான தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று ஆரம்பமாகியதுடன் 3 போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்தன.

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு

புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றதுடன் முதல் இன்னிங்சின்படி ஆனந்த கல்லூரி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆனந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித பேதுரு கல்லூரி அணிக்கு வழங்கியது.

இதன்படி பேதுரு கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.

மீண்டும் சூடுபிடித்துள்ள பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர்

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பேதுரு கல்லூரி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 128 (44.1) – முஹமட் அமீன் 22, தினேத் நிஸ்ஸங்க 4/34, அசெல் சிகெரா 3/14

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 213 (70.5) – கனிஷ்க ரன்திலககே 51, ஷாமல் ஹிருஷான் 45*, கவிந்து கிம்ஹான் 26, முஹமட் அமீன் 3/81, சந்துஷ் குணதிலக 3/43

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 166/4 (56) – சுலக்ஷன பெர்னாண்டோ 69, நிபுனக பொன்சேகா 46

முடிவு – வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றதுடன் முதல் இன்னிங்சின்படி ஆனந்த கல்லூரி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.


புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் திரித்துவக் கல்லூரி, கண்டி

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் திரித்துவக் கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் காலிறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அலோசியஸ் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திரித்துவக் கல்லூரி 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய அலோசியஸ் கல்லூரி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

199 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய திரித்துவக் கல்லூரி 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 130 (47) – அஷேன் பண்டார 49. V. நெதுமால் 4/43   

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 158 (50.1) – H ஜயசூரிய 37, A. லொகுகேடிய 37, கவிக டில்ஷான் 5/52

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 227/5d (33.4) – ரவீந்து சஞ்சன 102, சந்தீப சமோத் 52, R பீரிஸ் 2/38

திரித்துவக் கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 203/1 (46.4) – புபுது பண்டார 127*, H ஜயசூரிய 47

முடிவு – திரித்துவக் கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.


குருகுல கல்லூரி, களனி எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை

புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய குருகுல கல்லூரி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 365 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அந்தோனியார் கல்லூரி 265 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததுடன் தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய குருகுல கல்லூரி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி, களனி (முதலாவது இன்னிங்ஸ்) – 365/7d (102) – மலிந்து விதுரங்க 101*, கேமிர நயனதறு 65, பத்தும் மகேஷ் 65, கவிந்து மதுக்க 3/43

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை (முதலாவது இன்னிங்ஸ்) – 265 (79) – அவிஷ்க தரிந்து 86, ஜோயல் பின்டோ 59, ப்ருதுவி ருசார 3/64, யொஹான் மலித் 2/51

குருகுல கல்லூரி, களனி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 74/2 (15) – பிரவீன் நிமேஷ் 45*

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.


புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு

புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நாலந்த கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தோமியர் கல்லூரிக்கு வழங்கியது. இதன்படி தோமியர் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது.

சென். ஜோன்ஸ் கல்லூரியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு உதவிய அபினாஷ், தனுஜன்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் நாலந்த கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதலாவது இன்னிங்ஸ்) – 254/9d (82.2) – சிதார ஹபுஹின்ன 76, மனீஷ ரூபசிங்ஹ 51, லக்ஷித ரசஞ்சன 6/67

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 31/3 (10)


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவை

கதிரான மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் செபஸ்தியன் கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 201 (51.2) – மனீஷ சில்வா 48, நவீன் பெர்னாண்டோ 33, பிரவீன் ஜயவிக்கிரம 5/64, பிரவீன் குரே 3/41

புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 201/4 (47) -நிஷித்த அபிலாஷ் 92, நுவனிது பெர்னாண்டோ 79, ரவீந்து பெர்னாண்டோ 2/78