சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்ட டிவிசன்-1 ஒருநாள் தொடரின் காலிறுதிக்கு முந்திய சுற்றுப் போட்டிகள் இரண்டு புதன்கிழமை (22) நடைபெற்றன. இதன் மூலம் மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரிகள் காலிறுதிக்கு முன்னேறின.
புனித பேதுரு கல்லூரி கொழும்பு எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை
அணித்தலைவர் அவிஷ்க தரிந்துவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் புனித பேதுரு கல்லூரி அணியை வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி 2 விக்கெட்டுகளால் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இலகுவாக காலிறுதிக்கு முன்னேறிய புனித தோமியர் கல்லூரி
புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட புனித பேதுரு கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பானுக்க டி சில்வா ஓட்டமின்றி ஆட்டமிழந்ததும் அடுத்து வந்த ஷெனால் பொதேஜு 87 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்றார்.
அதேபோன்று மத்திய பின் வரிசையில் வந்த ஹிம்சர ரணதெனிய (47) மற்றும் வினுத லியனகே (47*) ஆகியோர் அணியின் ஓட்டங்களை அதிகரிக்க உதவினர்.
இதன் மூலம் புனித பேதுரு கல்லூரி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது. புனித அந்தோனியார் கல்லூரி சார்பில் சுழல் வீரர் கிளிபோர்ட் எலிமஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அவிஷ்க தரிந்து 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய புனித அந்தோனியார் கல்லூரி 2 ஓட்டங்களுக்கே முதல் இரு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தபோதும் முதல் வரிசையில் வந்த அவிஷ்க தரிந்து அபாரமாக துடுப்பெடுத்தாடி 68 ஓட்டங்களை பெற்றார்.
அதேபோன்று மத்திய வரிசை வீரர்களும் கைகொடுக்க புனித அந்தோனியார் கல்லூரி 48.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
போட்டியின் சுருக்கம்
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு – 248/7 (50) – ஷெனால் பொதேஜு 68, வினுத லியனகே 47*, ஹிம்சர ரணதெனிய 47, சவிரு பீரிஸ் 20*, கிளிபோர்ட் எலிம்ஸ் 3/40, அவிஷ்க தரிந்து 2/35
புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை – 252/8 (48.3) – அவிஷ்க தரிந்து 68, சன்கித்த ஹிருசான் 41, ஓசத ஜயதிலக்க 40, சாமிக்க டில்ஷான் 25*, அப்துல் ரகுமான் 20*, விஷால் சில்வா 20, பபசர ஹேரத் 3/44, மொனில் சில்வா 2/36
முடிவு – புனித அந்தோனியார் கல்லூரி 2 விக்கெட்டுகளால் வெற்றி
புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு
புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி கடைசி வரை போராடிய நிலையில் புனித செபஸ்டியன் கல்லூரி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்டியன் கல்லூரி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை எடுத்தது. சுகித்த பிரசன்ன அரைச்சதம் ஒன்றை பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்த உதவினார்.
இதன் போது பந்துவீச்சில் பவந்த ஜயசிங்க மற்றும் ஹிருதித் ஹேமசந்திர தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
கண்டியுடனான பரபரப்பான மோதலில் சுப்பர் ஓவரின் பின்னர் வென்ற கொழும்பு
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தர்ஸ்டன் கல்லூரியின் சனுத் நந்தினு (72), ரனேஷ் சில்வா (66) மற்றும் பவந்த ஜயசிங்க (50) ஆகியோர் சோபித்தபோதும் மறுமுனை விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் பறிபோக தர்ஸ்டன் கல்லூரி அணி 47.2 ஓவர்களில் 230 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
போட்டியின் சுருக்கம்
புனித செபஸ்டியன் கல்லூரி, மொட்டுவை – 236/9 (50) – சுகித்த பிரசன்ன 60, துனித் ஜயதுங்க 35, ஜனிஷ்க பெரேரா 33, பிஹங்க மெண்டிஸ் 25, நதீர பெர்னாண்டோ 22, பவன்த ஜயசிங்க 2/23, ஹிருதித் ஹேமசந்திர 4/44
தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு – 230 (47.2) – சனுத் நந்தினு 72, ரனேஷ் சில்வா 66, பவன்த ஜயசிங்க 50, ஜனிஷ்க பெரேரா 3/22
முடிவு – புனித செபஸ்டியன் கல்லூரி 6 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<