தர்மராஜ கல்லூரி எதிர் கிங்ஸ்வூட் கல்லூரி
மலையகத்தை சார்ந்த இரு அணிகளாகிய தர்மராஜ மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரி அணிகளுக்கிடையிலான இப்போட்டியில் தர்மராஜ கல்லூரி பெரும் திரளான ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் 53 – 32 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியது.
வெற்றியை சுவீகரித்த இசிபதன மற்றும் புனித பேதுரு கல்லூரிகள்
கண்டி நித்தவெல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் 20 நிமிடங்கள் முடிவடையும்பொழுது கிங்ஸ்வூட் அணி 10 – 07 என முன்னிலையில் காணப்பட்டது. கிங்ஸ்வூட் அணி, ரணவீர மூலம் பெனால்டியில் 3 புள்ளிகளையும், சச்சின்த செனவிரத்னவின் ட்ரை மூலம் 7 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது. மறுமுனையில் ப்ரமுதித்த ஹசரங்கவின் ட்ரை மூலம் தர்மராஜ கல்லூரி புள்ளிகளைப் பெற்றது.
முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தர்மராஜ கல்லூரி, மேலும் 3 ட்ரைகளை வைத்து அசத்தியது. அனைத்து கொன்வர்சன்களையும் வெற்றிகரமாக உதைத்த கிஹான் இஷார, மேலதிகமாக ஒரு ட்ரையையும் வைத்து, பெனால்டி ஒன்றையும் சரியாக உதைத்தார். விங் நிலை வீரரான பியதிஸ்ஸ ஏனைய இரண்டு ட்ரைகளையும் வைத்தார்.
கிங்ஸ்வூட் வீரர் தரிந்து ஒஷாத தமது அணியின் சார்பாக ஒரு ட்ரை வைத்து புள்ளி வித்தியாசத்தை குறைத்தார்.
முதல் பாதி: தர்மராஜ கல்லூரி 31- 15 கிங்ஸ்வூட் கல்லூரி
இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் கிங்ஸ்வூட் கல்லூரி தொடர்ந்து 3 ட்ரைகளை வைத்து ஆதிக்கம் செலுத்தியது. சச்சின்த செனவிரத்ன, ஆசிரி செனவிரத்ன மற்றும் ரிம்ஸான் அலித் ஆகியோர் ட்ரை வைத்தனர். ரணவீர ஒரே ஒரு கொன்வர்சனை மட்டும் வெற்றிகரமாக உதைய, கிங்ஸ்வூட் கல்லூரி 32-31 என முன்னிலை பெற்றது.
எனினும், போட்டியின் இறுதி 20 நிமிடங்களில் தர்மராஜ கல்லூரி மேலும் 3 ட்ரைகளை வைத்து போட்டியை தம்வசம் ஈர்த்தது. பாவந்த உடன்கமுவ, கிஹான் இஷார மற்றும் ப்ரமுத்தித ஹசரங்க ஆகியோர் தர்மராஜ கல்லூரி சார்பாக ட்ரை வைத்து வெற்றியை உறுதி செய்தனர்.
கிஹான் இஷார இரண்டு கொன்வர்சன்களை வெற்றிகரமாக உதைத்ததோடு, ஒரு பெனால்டியையும் சிறப்பாக நிறைவு செய்தார். பாவந்த உடன்கமுவவின் உதவியுடன் 3 ட்ரைகளையும் வைத்த தர்மராஜ கல்லூரி, 80 நிமிடங்கள் முடிவில் 53 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
முழு நேரம்: தர்மராஜ கல்லூரி (7T, 6C, 2P) – 32 (5T, 2C, 1P) கிங்ஸ்வூட் கல்லூரி
ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – பாவந்த உடன்கமுவ (தர்மராஜ கல்லூரி)
தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறும் பாசில் மரிஜா
வித்தியார்த்த கல்லூரியை அபாரமாக வென்ற புனித அந்தோனியார் கல்லூரி
நித்தவெல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடாத பொழுதும், இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடிய அந்தோனியார் கல்லூரி வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
போட்டியின் ஆரம்பத்திலேயே அந்தோனியார் கல்லூரி தனது முன் வரிசை வீரரான ஜித்தேன் தவுலகல மூலமாக ட்ரை வைத்தது. எனினும் தொடர்ந்து 2 ட்ரைகளை வாய்த்த வித்தியார்த்த கல்லூரி, 15 நிமிடங்களின் முடிவில் 14-05 என முன்னிலை பெற்றுக் காணப்பட்டது.
வித்தியார்த்த கல்லூரி சார்பாக சமரவீர மற்றும் திஸ்ஸ ஆகியோர் ட்ரை வைத்தனர். அடுத்த 15 நிமிடங்களில் தொடர்ந்து 3 ட்ரைகளை வைத்து அந்தோனியார் கல்லூரி பதிலடி கொடுத்தது. ருவன் அமரசிங்க இரண்டு ட்ரைகளை வைக்க தினேஷ் ரொட்ரிகோ ஒரு ட்ரை வைத்தார். எனினும் ரொட்ரிகோவின் ட்ரைக்கான கொன்வர்சன் மட்டுமே மகாரிமால் வெற்றிகரமாக உதையப்பட்டது. எனவே, அந்தோனியார் கல்லூரி 22-14 என முன்னிலை பெற்றது.
அவ்வணி முதல் பாதி நிறைவடைய முன்னர் மொகமட் ஷாதிர் மூலமாக மேலும் ஒரு ட்ரை வைத்தது. முதல் பாதியில் அனைத்து கொன்வர்சன்களையும் வெற்றிகரமாக உதைத்த ஹெட்டியாரச்சி, வித்தியார்த்த கல்லூரிக்கு பலம் சேர்த்தார்.
முதல் பாதி முடிவடையும் பொழுது இரண்டு அணிகளையும் ஒரு புள்ளி மட்டுமே வேறுபடுத்தியது.
முதல் பாதி: அந்தோனியார் கல்லூரி 22 – 21 வித்தியார்த்த கல்லூரி
வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள சிங்கர் கிண்ண இரண்டாம் சுற்று ரக்பி போட்டிகள்
இரண்டாம் பாதி முழுவதையும் புனித அந்தோனியார் கல்லூரி அணியே ஆதிக்கம் செலுத்தியது. அவ்வணி முதல் 10 நிமிடங்களில் 3 ட்ரைகளை தொடர்ந்து வைத்தது. மொகமட் ஷாபீர், ருவன் அமரசிங்க மற்றும் லியனகே ஆகியோர் கம்பத்தின் நடுவே ட்ரை வைத்து மொகமட் மகாரிமிற்கு கொன்வர்சனை இலகுபடுத்தினர்.
வித்தியார்த்த கல்லூரி, தமது தலைவர் கழுவாராச்சி மூலமாக ஒரே ஒரு ட்ரையை மட்டுமே இரண்டாம் பாதியில் வைத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் அந்தோனியார் கல்லூரி தொடர்ந்து 3 ட்ரைகளை வைத்து தமது வெற்றியை உறுதி செய்தது.
வணசிங்க இரண்டு ட்ரைகளை வைக்க, மொகமட் ஷாபீர் மேலும் ஒரு ட்ரை வைத்தார். மகாரிம் ஒரு கொன்வர்சனை தவறவிட்டார். இதன்படி 80 நிமிடங்கள் முடிவில் அந்தோனியார் கல்லூரி வெற்றி பெற்றது.
முழு நேரம்: புனித அந்தோனியார் கல்லூரி 62 (10T, 6C) – 28 (4T, 4C) வித்தியார்த்த கல்லூரி
Thepapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – மொகமட் ஷாபீர் (அந்தோனியார் கல்லூரி)