சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறும் டிவிசன் – I பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் முடிவடைந்தன.
ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் புனித பேதுரு கல்லூரி
புனித பேதுரு கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் முடிவடைந்த இந்தப் போட்டியில் மைதான சொந்தக்காரர்கள் 7 விக்கெட்டுக்களால் வெற்றி அடைந்தனர்.
இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த மஹாநாம, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகள்
19 வயதின் கீழான பாடசாலை அணிகளுக்கு இடையில் சிங்கர்..
நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் ரிச்மண்ட் கல்லூரி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 203 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ஆடிய புனித பேதுரு கல்லூரி அவர்களுடைய முதல் இன்னிங்சில் 239 ஓட்டங்களை சேர்த்திருந்தனர்.
இதனையடுத்து 36 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த காலி வீரர்கள் 87 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து மோசமான துடுப்பாட்டத்தை காட்டியிருந்தனர். இதில் சச்சின் சில்வா வெறும் 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்களை புனித பேதுரு கல்லூரிக்காக சுருட்டியிருந்தார்.
ரிச்மண்ட் கல்லூரியின் மந்தமான இரண்டாம் இன்னிங்சினை அடுத்து போட்டியின் இலகு வெற்றி இலக்காக மாறிய 52 ஓட்டங்களை மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து பேதுரு கல்லூரி அடைந்து தொடரில் தமது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
போட்டியின் சுருக்கம்
ரிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 203 (76) தவீஷ அபிஷேக் 63, சதுன் மெண்டிஸ் 53, சிவன் பெரேரா 3/27, மொஹமட் அமீன் 2/72
புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 239 (91.5) சனோன் பெர்னாந்து 38, சுலக்ஷன பெர்னாந்து 37, திலும் சுதீர 4/74, சந்துன் மெண்டிஸ் 4/80
ரிச்மண்ட் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 87 (27.4) சச்சின் சில்வா 7/19, மொஹமட் அமீன் 3/50
புனித பேதுரு கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 55/3 (6.4)
போட்டி முடிவு – புனித பேதுரு கல்லூரி7 விக்கெட்டுக்களால் வெற்றி
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் தர்ஸ்டன் கல்லூரி
தர்ஸ்டன் கல்லூரி மற்றும் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணிகள் இடையிலான இந்த ஆட்டம் சமநிலை அடைந்தது.
நேற்று தர்ஸ்டன் கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பாடியிருந்த மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் அஷான் பெர்னாந்து (102*) மற்றும் கெவின் பெரேரா (102) ஆகியோரின் அபார சதங்களோடு 363 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
வரலாற்றில் முதல்முறை இடம்பெற்ற இளையோர் உலகக் கிண்ண ஆரம்ப விழா
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால்…
இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சில் ஆடிய தர்ஸ்டன் கல்லூரி 206 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது. பசிந்து உஸ்ஹெட்டி மற்றும் நவீன் பெர்னாந்து ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் மாரிஸ் ஸ்டெல்லா அணிக்காக இந்த இன்னிங்சில் சுருட்டினர்.
முதல் இன்னிங்ஸ் ஓட்டங்கள் போதாது என்பதால், இரண்டாம் இன்னிங்சில் பதிலுக்கு பலோவ் ஒன் முறையில் ஆடிய தர்ஸ்டன் கல்லூரி 205 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிந்தது.
போட்டியின் சுருக்கம்
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 363/8d (72) அஷான் பெர்னாந்து 102*, கெவின் பெரேரா 102, அயெஷ் வீரரத்ன 3/64
தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 206 (61.5) நிப்புன் லக்ஷன் 45, பசிந்து உஸ்ஹெட்டி 4/48, நவீன் பெர்னாந்து 4/66
தர்ஸ்டன் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 205/6 (47.4) சவான் பிரபாத் 61, பன்சிலு தேஷான் 49, லசித் குருஸ்புள்ள 2/66
போட்டி முடிவு – போட்டி சமநிலை அடைந்தது
லும்பினி கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகல்
குருநாகல் மலியதேவ கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய லும்பினி கல்லூரி கவின் ஹெமித்த (72) மற்றும் ஹேமால் லங்கார (60*) ஆகியோர் பெற்றுக்கொண்ட அரைச்சதங்களுடன் முதல் இன்னிங்சில் 269 ஓட்டங்களினை சேர்த்துக் கொண்டது.
பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் ஆடிய மலியதேவ வீரர்கள் 168 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவை எட்டியது. முன்னர் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் கடந்த கவின் ஹெமித்த லும்பினி கல்லூரிக்காக இன்றைய நாளில் 4 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தார்.
போட்டியின் சுருக்கம்
லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 269 (62.5) கவின் ஹெமித்த 73, ஹேமால் லங்கார 60*, துலாஜ் ரணதுங்க 4/52
மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 168/6 (33.5) துலாஜ் ரணதுங்க 41, கவின் ஹெமித்த 4/33
போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்
சந்திமாலின் திறமையை நாம் இன்னும் பார்க்கவில்லை
கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த..
டி.எஸ் சேனநாயக்க கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி
பண்டாரகம பொது மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய டி.எஸ் சேனநாயக்க வீரர்களுக்கு எதிர்பார்த்த ஆரம்பம் அமையவில்லை. எதிரணியான நாலந்த வீரர்களின் அபாரப் பந்து வீச்சினால் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 145 ஓட்டங்களுடன் சுருண்டது. இதில், சமிந்து விஜேசிங்க, உமேஷ்க தில்ஷான் ஆகியோர தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் நாலந்த கல்லூரிக்காக கைப்பற்றினர்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்சில் ஆடிய நாலந்த கல்லூரி அணி, சுஹங்க விஜேயவர்தன ஆட்டமிழக்காமல் பெற்ற அரைச்சத (85*) உதவியோடு 236 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்பட்ட போது போட்டியின் இன்றைய நாள் ஆட்டம் முடிவடைந்தது.
போட்டியின் சுருக்கம்
டி.எஸ் சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 145 (43.3) முதித லக்ஷன் 57, சமிந்து விஜேசிங்க 4/21, உமேஷ்க தில்ஷான் 4/22
நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 236/6 (49) சுஹங்க விஜேயவர்தன 85*, கவிஷ்க பெரேரா 33, சந்தரு சந்தித 2/35
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்