17 வயது வீரரின் அபாரத்தால் திரித்துவ கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

205

19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (06) நான்கு போட்டிகள் முடிவடைந்தன.  

புனித ஜோசப் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி

கொழும்பின் பிரபல்யமான இரண்டு பாடசாலைகளான இவ்விரு கல்லூரி அணிகளும் மோதியிருந்த இந்தப் போட்டி சமநிலை அடைந்தது.

இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பித்துக்கொண்ட ஸாஹிரா கல்லூரி

19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட …….

நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய புனித ஜோசப் கல்லூரி அணி இலங்கையின் பாடசாலைகள் வரலாற்றில் இரண்டாம் விக்கெட்டுக்காக பகிரப்பட்ட  அதி கூடிய இணைப்பாட்டத்துடன் (314) முதல் இன்னிங்சில் 392 ஓட்டங்களினை குவித்து ஆட்டத்தினை நிறுத்தியது. பின்னர், முதல் இன்னிங்சில் ஆடிய வெஸ்லி கல்லூரி முதல் நாள் ஆட்டம் முடிவடையும் போது 72 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்பட்டது.

போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த  வெஸ்லி வீரர்கள் 336 ஓட்டங்களை குவித்து எதிரணியின் முதல் இன்னிங்சினை நெருங்கியிருந்தனர். வெஸ்லி கல்லூரிக்காக ஹசித் கீசர 97 ஓட்டங்களைச் சேர்த்து சதம் பெறும் வாய்ப்பினை தவறவிட்டிருந்தார். மறுமுனையில் துனித் வெல்லால்கே 6 விக்கெட்டுக்களை ஜோசப் கல்லூரி சார்பாக வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து 57 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த ஜோசப் கல்லூரி அணியின் இளம் வீரர்கள் 2 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களினை குவித்திருந்த போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைய, ஆட்டம் சமநிலைக்கு வந்தது. ரேவான் கெல்லி ஜோசப் கல்லூரிக்காக அரைச்சதம் ஒன்றினை (75) பதிவு செய்த நிலையில் ஆட்டமிழக்காது நின்றார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 393/2d (75.5) ரேவான் கெல்லி 182, நிப்புன் சுமனசிங்க 156*

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 336 (88) ஹசித் கீசார 97, திசுரக்க அக்மீவன 67, துனித் வெல்லால்கே 6/80

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 143/2 (28.5) ரெவான் கெல்லி 75*, நிப்புன் சுமனசிங்க 45


திரித்துவ கல்லூரி, கண்டி எதிர் மொரட்டு மஹா வித்தியாலயம்

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் திரித்துவ கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் மொரட்டு கல்லூரியினை அபாரமாக வீழ்த்தியது.

மாலிங்கவை விடுவித்துள்ள மும்பை அணி

2018ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ்……

திரித்துவ கல்லூரி அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை அடுத்து, தமது முதல் இன்னிங்சில் ஆடிய மொரட்டுவ வீரர்கள் 97 ஓட்டங்களுடன் சுருண்டனர். இந்த ஓட்டங்களால் மீண்டும் பலோவ் ஒன் முறையில் மொரட்டு மஹா வித்தியாலய அணிக்கு துடுப்பாட நேர்ந்தது.

இதன்படி அவ்வணி வீரர்களுக்கு 17 வயதேயான வேகப்பந்து வீச்சாளர் உவின் பீரிஸ் அதிர்ச்சியூட்டினார். இதனால் இரண்டாம் இன்னிங்சில் வெறும் 41 ஓட்டங்களை மாத்திரமே குவித்து மொரட்டு மஹா வித்தியாலயம் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது.

திரித்துவ கல்லூரியின் பீரிஸ் இந்த இன்னிங்சில் வெறும் 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்களை கைப்பற்றி அதிசிறந்த பந்துவீச்சினை வெளிக்காட்டியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 262/9d (63.2) A. செனதீர 53, H. ஜயசூரிய 50, செஹத டி சொய்ஸா 5/56

மொரட்டு மஹா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 97 (42.2) விமுக்தி நெத்மல் 3/35

மொரட்டு மஹா வித்தியாலயம் (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 41 (16) உவின் பீரிஸ் 8/23


தர்மசோக கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

பெனடிக்ட் கல்லூரியின் சொந்த மைதானத்தில் முடிவுற்ற இப்போட்டியில் காலி தர்மசோக கல்லூரி அணியினை பெனடிக்ட் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 60 ஓட்டங்களால் தோற்கடித்தது.

தர்மசோக கல்லூரியின் மோசமான முதல் இன்னிங்சினை (86) அடுத்து மஹேஷ் தீக்ஷனவின் அபார சதத்துடன் (120) புனித பெனடிக்ட் கல்லூரி தம்முடைய முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 214 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த தர்மசோக கல்லூரியினர் 154 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இன்னிங்ஸ் தோல்வியினை தழுவினர்.

கவீஷ ஜயத்திலக்க வெறும் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி புனித பெனடிக்ட் கல்லூரியின் வெற்றிக்கு பிரதான பங்கினை வகித்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

தர்மசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 86 (41.4) மஹேஷ் தீக்ஷன 5/19

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 300/7d (75) மஹேஷ் தீக்ஷன 120, கவிஷ ஜயத்திலக்க 66*, ரயன்  செலிசிங்க 45, கவிந்து நதீஷன் 2/63

தர்மசோக கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 154 (66.4) அஷந்த டி சில்வா 43, கவீஷ ஜயத்திலக்க 5/18

காலி அணிக்கு வலுச்சேர்த்த லசித் பெர்ணாந்துவின் சகலதுறை ஆட்டம்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டுக்கான உள்ளுர் பருவ…….


ஆனந்த கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

கொழும்பின் பாடசாலைகளான ஆனந்த கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகள் இடையிலான இந்த ஆட்டம் சமநிலை அடைந்தது.

நேற்று பேதுரு கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஆனந்த கல்லூரி வீரர்களுக்கு 151 ஓட்டங்களினை முதல் இன்னிங்சில் குவிக்க முடிந்தது. லஹிரு ஹிரன்ய ஆனந்த கல்லூரிக்காக அரைச்சதம் பெற பேதுரு கல்லூரிக்காக பந்து வீச்சில் தாரிக் சபூர் மற்றும் சிவன் பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பேதுரு கல்லூரி சலித் பெர்னாந்து (95) மற்றும் ரன்மித் ஜயசேன (91) ஆகியோரின் துடுப்பாட்டத்தின் துணையோடு 282 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

பின்னர், 131 ஓட்டங்கள் குறைவாக காணப்பட்ட நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய ஆனந்த கல்லூரி 57.4 ஓவர்களில் 157 ஓட்டங்களினை குவித்திருந்த போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது. லஹிரு ஹிரன்ய இந்த இன்னிங்சிலும் ஆனந்த கல்லூரிக்காக அரைச்சதம் விளாசி ஆட்டமிழக்காமல் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) – 151 (59.3) லஹிரு ஹிரன்ய 57, கமேஷ் நிர்மல் 31, சிவன் பெரேரா 3/13, தாரிக் ஷபூர் 3/37

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) – 282/3d (70) சலித் பெர்னாந்து 95, ரன்மித் ஜயசேன 91, சனான் பெர்னாந்து 65, சமிக்க குணசேகர 2/68

ஆனந்த கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ் ) – 155/6 (57.4) லஹிரு ஹிரன்ய 51*