சிங்கர் நிறுவனம் 19 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு 3 (டிவிஷன்-III)) பாடசாலை அணிகளுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தி வரும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் புதன்கிழமை (23) நிறைவடைந்திருக்கும் போட்டிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, அகுறனை அஸ்ஹர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசிரியார் கல்லூரி அணிகள் இன்னிங்ஸ் வெற்றிகளை பதிவு செய்திருக்கின்றன.
துடுப்பாட்டத்தில் சதத்துடன் பந்து வீச்சிலும் அசத்திய ஸ்கந்தாவின் சோபிகன்
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் பிரிவு III …..
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எதிர் மாரவில புனித சேவியர் கல்லூரி
மாரவில தரப்பின் சொந்த மைதானமான எல்பர்ட் F. பீரிஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (22) தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய புனித சேவியர் கல்லூரி அணி, யாழ் மத்திய கல்லூரி வீரர்களின் அபார பந்துவீச்சினால் வெறும் 30 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன்போது, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சில் N. திவாகரன் மற்றும் J. விவாஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 248 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர். அவ்வணியின் துடுப்பாட்டத்தில் A. ஜயதர்சன் அரைச்சதம் தாண்டி 54 ஓட்டங்களைப் பெற V. இந்துஜன் 41 ஓட்டங்களுடன் தனது தரப்பினை வலுப்படுத்தியிருந்தார்.
Photos: St. Patrick’s College vs Kokuvil Hindu College U19 Schools Division III Day 2
தொடர்ந்து 218 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த புனித சேவியர் கல்லூரி இம்முறையும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி 81 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சில் N. திவாகரன் வெறும் 11 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
போட்டியின் சுருக்கம்
புனித சேவியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 30 (18.4) N. திவாகரன் 3/03, J.விவஸ்டன் 3/06
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 248 (71.4) A. ஜயதர்சன் 52, V. இந்துஜன் 41, ரொஷேன் சவிந்து 5/75
புனித சேவியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 81 (32) தினித் யோகன 33, N. திவாகரன் 5/11
முடிவு – யாழ். மத்திய கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றி
ஸ்ரீ றாஹுலவுடன் அக்குறனை அஸ்ஹர் கல்லூரிக்கு இன்னிங்ஸ் தோல்வி
சிங்கர் நிறுவனத்தின் அனுசரனையோடு டிவிஷன் – III …
அகுறனை அஸ்ஹர் கல்லூரி எதிர் குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரி
குருநாகலில் கடந்த செவ்வாய்க்கிழமை (22) ஆரம்பமான இந்தப் போட்டியில் எதிரணியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த அஸ்ஹர் கல்லூரி அணி, தமது முதல் இன்னிங்ஸில் 82.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 254 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
அஸ்ஹர் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக நளீம் ஷயித் 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்க, MSM. அயாஸ் 65 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேநேரம், சேர் ஜோன் கொத்தலாவெல கல்லூரியின் பந்துவீச்சில் சான்ன திஸாநாயக்க 7 விக்கெட்டுகளை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Photos: St. John’s College vs Tissa Central College | U19 Schools Division II | Day 2
இதன்பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரி அணி வெறும் 88 ஓட்டங்களுடன் சுருண்டதுடன், இரண்டாம் இன்னிங்ஸில் பலோவ் ஒன்முறையில் ஆடும் நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாகியது.
அதன்படி, 166 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த சேர். ஜோன் கொத்தலாவல அணி வீரர்கள் இந்த இன்னிங்ஸிலும் சொதப்பலான ஆட்டத்தை காண்பித்து 163 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இன்னிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர்.
பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து நாடு திரும்பிய மாலிங்க
ஆறாவது பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் டி-20 தொடர் தற்போது…
அஸ்ஹர் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக MAM. சாக்கீர் மொத்தமாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றியும், MRM. யூசுப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியும் தமது அணி வெற்றி பெற பங்களிப்புச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
அஸ்ஹர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 254 (82.1) நளீம் ஷயித் 91*, MSM. அயாஸ் 65, சான்ன திஸநாயக்க 7/71
சேர். ஜோன் கொத்தலாவல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 88 (25.5) மதுக்க டில்சான் 21, MRM. யூசுப் 6/28, MAM. சாக்கீர் 3/44
சேர். ஜோன் கொத்தலாவல கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 163 (45.4) சானுக்க தீமன்த 36*, MAM. சாக்கீர் 6/35
முடிவு – அகுறனை அஸ்ஹர் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களால் வெற்றி
கொக்குவில் இந்துக் கல்லூரி எதிர் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி
செவ்வாய்க்கிழமை (23) கொக்குவில் இந்துக் கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் மைதானச் சொந்தக்காரர்களான இந்துக் கல்லூரி அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடி வெறும் 87 ஓட்டங்களையே பெற்றது. புனித பத்திரிசியார் கல்லூரியின் பந்துவீச்சு சார்பில் DR. பியட்ரிக் 4 விக்கெட்டுகளையும், D. டெனிசிஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.
இதன் பின்னர் தம்முடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி EN. டிலக்சன் (70) மற்றும் இவான் ரோஷன்தன் (50) ஆகியோர் பெற்ற அரைச்சதங்களோடு 250 ஓட்டங்களை குவித்தது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் பந்துவீச்சு சார்பில் S. கஜனன் 86 ஓட்டங்களை விட்டுத்தந்து 7 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
Photo Album : Velanai Vengaikal vs Pannai Tilko Gradiators | Jaffna Super League 2018/19
தொடர்ந்து 163 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்துக் கல்லூரி அணி, பத்திரிசியார் வீரர்களின் திறமையான பந்துவீச்சினால் வெறும் 63 ஓட்டங்களுக்குள் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது.
இந்துக் கல்லூரி அணி இன்னிங்ஸ் தோல்வியினை தழுவ பிரதான காரணமாக அமைந்த பத்திரிசியார் கல்லூரி அணியின் பந்துவீச்சில் டெனிசியஸ் 5 விக்கெட்டுகளையும், DR. பியட்ரிக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 87 (56) B. துஹார்கன் 37, DR.பிரட்ரிக் 4/23, D. டெனிசியஸ் 3/20
புனித பத்திரிசியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 250 (58) EN. டிலக்ஷன் 70, இவான் ரோஷன்தன் 50, S. கஜனன் 7/86
இந்துக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 63 (28.3) டெனிசியஸ் 5/18, DR. பியட்ரிக் 3/24
முடிவு – புனித பத்திரிசியார் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் வெற்றி