கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய நகரங்களின் பிரதான பாடசலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பமானது.
D.S. சேனநாயக கல்லூரி, கொழும்பு எதிர் மஹாநாம கல்லூரி, கொழும்பு
கொழும்பு D.S. சேனநாயக கல்லூரி மற்றும் மஹாநாம கல்லூரி அணிகளுக்கு இடையில் இடம்பெறும் தங்கச்சமர் என அழைக்கப்படும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் சமரின் இவ்வருடத்திற்கான போட்டி இன்று ஆரம்பமானது. 12 ஆவது தடவையாக நடைபெறும் இப்போட்டி இன்று காலை பி சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய D.S. சேனநாயக கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் மஹாநாம கல்லூரி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
D.S. சேனநாயக கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 156 (59) – ஷெனால் சந்திரசேகர 56, விஹான் குணசேகர 45, ஹேஷான் ஹெட்டியாராச்சி 4/49, ஹஷான் சந்தீப 2/45, சொனால் தினூஷ 2/18
மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 83/3 (29) – பதும் பொதேஜு 39*, பவந்த வீரசிங்ஹ 31
புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி எதிர் திரித்துவக் கல்லூரி, கண்டி
கண்டி மாநகரின் இரு பிரதான பாடசாலைகளான புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் திரித்துவக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 101 ஆவது நீலச்சமர் இன்று காலை கண்டி அஸ்கிரிய மைதானத்தில் ஆரம்பமானது.
பங்களாதேஷை எதிர்கொள்ள எமக்கு எந்த அழுத்தமும் இல்லை – ஹத்துருசிங்க
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித அந்தோனியார் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்தோனியார் கல்லூரி அணி 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் திரித்துவக் கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 115 (37.2) – நவோதய விஜேகுமார 32, முஹமட் அப்சர் 29, திசரு தில்ஷான் 4/30, ருவின் பீரிஸ் 3/31
திரித்துவக் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 150/5 (39) – ஹசித போயகொட 72, ஜெஸ் வீரசிங்ஹ 37, அஷான் லொகுகெடிய 21*, நிம்னக ஜயதிலக 2/45.
கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி
கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி அணிக்கும் தர்மராஜ கல்லூரி அணிக்கும் இடையில் இடம்பெறும் மாபெரும் கிரிக்கெட் சமரின் (Battle of the Maroons) 112 ஆவது அத்தியாயம் இன்று காலை பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மராஜ கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை கிங்ஸ்வுட் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்வுட் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி
பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் தர்மராஜ கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 977 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 166 (53) – தனஞ்சய மதுரங்க 42, துளின் விஜேநாராயண 40, கனிது கம்புருகமுவ 33, யசித சமரரத்ன 3/49, விரஜித் எஹலபொல 2/47, உபேந்திர வர்ணகுலசூரிய 2/35
தர்மராஜ கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 97/6 (40) – பவந்த பனங்கமுவ 30, லக்மால் ட் சில்வா 2/31
ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் மஹிந்த கல்லூரி, காலி
காலி ரிச்மண்ட் மற்றும் மஹிந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான 113ஆவது அன்பர்களின் சமர் இன்று காலை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை ரிச்மண்ட் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி ரிச்மண்ட் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் மஹிந்த கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 70 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 170 (62.4) – துவின் கலன்சூரிய 42, தனஞ்சய லக்ஷான் 31, திலும் சுதீர 25, பசன் பெதனகொட 5/46, நவோத் பரணவிதான 3/20
மஹிந்த கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 70/3 (32) – நவோத் பரணவிதான 27, ஹன்சிக வெலிஹிந்த 20*, திலும் சுதீர 2/12
அனைத்து போட்டிகளினதும் இரண்டாவதும் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.