சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் (31) இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன. அதோடு மொரட்டுவையில் நடைபெற்ற திரித்துவக் கல்லூரி மற்றும் புனித செபஸ்டியன் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி சீரற்ற காலநிலையினால் கைவிடப்பட்டது.
புனித சில்வஸ்டர் கல்லூரி எதிர் லும்பினி கல்லூரி
நேற்று BRC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் புனித சில்வஸ்டர் கல்லூரி தமது முதல் இன்னிங்சினை 91 ஓட்டங்களுடனும், லும்பினி கல்லூரி 101 ஓட்டங்களுடனும் நிறைவு செய்திருந்தன. போட்டியின் முதல் நாளிலேயே மீண்டும் இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த புனித சில்வஸ்டர் கல்லூரி 63 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்திருந்தது.
துலாஜின் அபாய பந்து வீச்சுக்கு மத்தியில் வலுப்பெற்ற புனித ஜோசப் கல்லூரி
போட்டியின் இரண்டாம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த புனித சில்வஸ்டர் கல்லூரியினர் நிம்சார அத்தரக்கல்லவின் பெறுமதியான ஓட்டங்களோடு (37) 53.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 131 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டனர். இந்த இன்னிங்சில் லும்பினி கல்லூரி சார்பாக கவீன் பீரிஸ் மொத்தமாக 33 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 121 ஓட்டங்களினை பெற பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பம் செய்த லும்பினி கல்லூரி இளம் வீரர்கள் ஒரு தடுமாற்றத்தினை காட்டியிருந்த போதிலும் 44.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து இலக்கினை அடைந்தனர். இதற்கு இன்றைய நாளில் முன்னர் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட கவீன் பீரிஸ் 38 ஓட்டங்களுடன் உதவயிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
புனித சில்வஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 91 (36.1) பஷான் ஹெட்டியாராச்சி 21, சஷிக்க சந்திர 6/25, விமுக்தி குலத்துங்க 3/23
லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) –102 (29.3) லகிந்து உபேந்திரா 33, பஷான் ஹெட்டியாராச்சி 6/14
புனித சில்வஸ்டர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) –131 (53.5) நிம்சார அத்தரக்கல்ல 37, கசுன் எதிரிதிலக்க 19, கவீன் பீரிஸ் 6/33
லும்பினி கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) –121/7 (44.4) கவீன் பீரிஸ் 38, ரவீஷ மதுமல் 36*, நிம்சார அத்தரக்கல்ல 2/22
போட்டி முடிவு – லும்பினி கல்லூரி 3விக்கெட்டுக்களால் வெற்றி
புனித ஜோசப் கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி
மருதானை புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் யோஹான் டி சில்வாவின் அரைச்சதத்தோடு புனித ஜோசப் கல்லூரி தமது முதல் இன்னிங்சில் 286 ஓட்டங்களுடன் வலுப்பெற்றிருந்தது. தொடர்ந்து தமது முதலாம் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த குருணாகல் மலியதேவ கல்லூரியின் வீரர்கள் 46 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினைப் பறிகொடுத்திருந்த நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டநேரம் நிறைவடைந்தது.
இந்திய தொடரின் பிறகு இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்
போட்டியின் இரண்டாவது நாளில் தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த குருநாகல் வீரர்கள் 62.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 181 ஓட்டங்களினை குவித்திருந்தனர். இதில் முதித பிரேமதாச மலியதேவ கல்லூரிக்காக அரைச்சதம் (52) கடந்திருந்தார். ஜோசப் கல்லூரியின் பந்துவீச்சில் இடதுகை சுழல் வீரர் துனித் வெல்லால்கே 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 105 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பம் செய்திருந்த புனித ஜோசப் கல்லூரி அணி விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 50 ஓட்டங்களினை குவித்திருந்த போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது இதனால் போட்டி சமநிலை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 286 (64.5) யோஹான் டி சில்வா 65, தினேத் ஜயக்கொடி 37, துலாஜ் ரணதுங்க 7/96
மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 181 (62.5) முதித பிரேமதாச 52, சஜீவன் பிரியதர்ஷன 33, துனித் வெல்லால்கே 5/58, நிப்புன் சுமணசிங்க 2/13
புனித ஜோசப் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ் ) – 50/0 (9.4)
போட்டி முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (புனித ஜோசப் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)