சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழான பாடசாலை அணிகளுக்கு இடையில் நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நிறைவடைந்த.
குருகுல கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி
மஹர சிறைச்சாலை மைதானத்தில் நிறைவடைந்த இப்போட்டியில் கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களால் களனி குருகுல கல்லூரியினை வீழ்த்தியது.
நேற்று (28) ஆரம்பித்த இப்போட்டியின், இரண்டாம் நாளில் புனித பேதுரு கல்லூரி 93 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்து 100 ஓட்டங்களை மாத்திரமே குவித்துக்கொண்டது. பேதுரு கல்லூரியினை இவ்வளவு குறைவான ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த உதவிய ப்ருத்துவி ருசார 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
மஹிந்த, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகளுக்கு இன்னிங்ஸ் வெற்றி
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு…
தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த குருகுல கல்லூரியும் ஓட்டங்கள் சேர்ப்பதில் இன்னல்களை எதிர்கொண்டு வெறும் 119 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றது. இம்முறையும் முதல் இன்னிங்ஸ் போன்று பேதுரு கல்லூரியின் இடதுகை சுழல் வீரர் மொஹமட் அமீன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
தொடர்ந்து குருகுல கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் காரணமாக (126) வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 146 ஓட்டங்களினைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய பேதுரு கல்லூரி அணி, சனோன் பெர்னாந்துவின் அரைச் சதத்துடன் (52) ஐந்து விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 126 (55.4) ரசிந்து அரோஷ 42, மொஹமட் அமீன் 5/46, ஹசித்த கிரியெல்ல 2/11, சச்சின் சில்வா 2/18
புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 100 (46) ப்ரூத்வி ருசார 5/20, பிரவீன் நிமேஷ் 2/28
குருகுல கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 119 (44.5) செஷான் மலிந்த 38*, மொஹமட் அமீன் 5/45, ருவின் செனவிரத்ன 4/29
புனித பேதுரு கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 147/5 (44.4) சனோன் பெர்னாந்து 52, சஷிந்த சமித் 2/19
றிச்மண்ட் கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி
கொழும்பு புனித தோமியர் கல்லூரி மற்றும் காலி றிச்மண்ட் கல்லூரிகள் இடையிலான இந்த ஆட்டம் சமநிலை அடைந்தது.
தோமியர் கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியின் நேற்றைய நாள் நிறைவில் முதல் இன்னிங்சில் 98 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் காணப்பட்ட றிச்மண்ட் கல்லூரி அணி இன்றைய நாளில் 123 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. சனோன் பெர்னாந்து 4 விக்கெட்டுக்களை தோமியர் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.
கொழும்பில் பயிற்சிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த ஹத்துருசிங்க
அடுத்து இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த தோமியர் கல்லூரி அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. இதில் சிதார ஹப்புவின்ன தோமியர் கல்லூரிக்காக அரைச்சதம் தாண்டியிருந்தார்.
தோமியர் கல்லூரியின் முதலாம் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸ் காரணமாக வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 197 ஓட்டங்களை அடைய இரண்டாம் இன்னிங்சினை தொடங்கிய காலி வீரர்கள் போட்டியின் ஆட்ட நேரம் முடிந்த போது 3 விக்கெட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களுடன் காணப்பட்டனர்.
போட்டியின் சுருக்கம்
புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 130(54.1) மனீஷா ருப்பசிங்க 42, சித்தார கப்புவின்ன 30, அவிந்து தீக்ஷன 3/16, அம்சி டி சில்வா 3/19, திலும் சுதீர 3/45
றிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 121 (59.1) வினுஜ கிரியெல்ல 29, சந்துன் மெண்டிஸ் 28, சனோன் பெர்னாந்து 4/28, துலிப் குணரத்ன 3/21
தோமியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 187/7d (62) சிதார ஹப்புவின்ன 53, சந்துன் மெண்டிஸ் 3/55
றிச்மண்ட் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 101/3 (29) துவின் கலன்சூரிய 56*, தவீஷ அபிசேக் 23*, டெலோன் பீரிஸ் 2/33
ஜனாதிபதி கல்லூரி மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஜனாதிபதி கல்லூரியினர் முதலில் துடுப்பாடி 52.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை முதல் இன்னிங்சில் சேர்த்தனர்.
றிபாஸ் மெளரூஸ் ஜனாதிபதி கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் பெற்றிருக்க மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பந்துவீச்சில் கெவின் பெரேரா மற்றும் பசிந்து உஸ்ஹெட்டி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்சை தொடங்கிய நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி முதல் நாள் ஆட்ட முடிவில், லசித் குருஸ்புள்ள பெற்ற அபார சதத்தின் (104) உதவியுடன் 40 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களுடன் ஸ்திர நிலையில் காணப்படுகின்றது.
போட்டியின் சுருக்கம்
ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) – 194 (52.3) றிபாஸ் மெளரூஸ் 43*, ஹிருமா சிகர 41, கெவின் பெரேரா 3/19, பசிந்து உஸ்ஹெட்டி 3/34
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 276/5 (40) லசித் குருஸ்புள்ள 104, ரோஷென் பெர்னாந்து 48, சத்துர அனுராத 46
ஆட்டத்தின் இரண்டாம் நாள் நாளை தொடரும்
றோயல் கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி
கண்டி தர்மராஜ கல்லூரி மற்றும் றோயல் கல்லூரிகள் இடையிலான இந்தப் போட்டி தர்மராஜ கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய றோயல் கல்லூரி அணி கவிந்து செனாரத்ன (115) இன் சத உதவியோடும், பாக்ய திசநாயக்க (68), கயான் திசநாயக்க( 52)ஆகியோரின் அரைச்சத உதவியுடனும் 301 ஓட்டங்களினை முதல் இன்னிங்சுக்காகப் பெற்றது.
2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள்
பதிலுக்கு தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த தர்மராஜ கல்லூரியினர் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை பறிகொடுத்து காணப்படுகின்றனர்.
போட்டியின் சுருக்கம்
றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)– 301 (66.3) கவிந்து செனவிரத்ன 115, பாக்ய திசநாயக்க 68, கயான் திசநாயக்க 52, நவிந்து டில்சான் 3/57
தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 24/1 (13)
ஆட்டத்தின் இரண்டாம் நாள் நாளை தொடரும்
ஆனந்த கல்லூரி எதிர் தர்மபால கல்லூரி
கொழும்பினைச் சேர்ந்த இரண்டு பாடசாலைகளுக்குமான இப்போட்டி ஆனந்த கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற மைதான சொந்தக்காரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தனர்.
ஆனந்த கல்லூரி அணி முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. இந்த இன்னிங்சில் பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரியின் பந்துவீச்சாளர்களான டில்ஷான் டி சில்வா மற்றும் சமிந்து சமரசிங்க ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்சினை தொடங்கிய விருந்தாளிகளான தர்மபால கல்லூரியினருக்கு, ஆனந்த கல்லூரி சார்பாக வலதுகை வேகப்பந்து வீச்சாளரான ஷமல் ஹிருசன் அதிர்ச்சியளித்தார். இதனால் வெறும் 42 ஓட்டங்களுடனேயே தர்மபால கல்லூரி முதல் இன்னிங்சில் சுருண்டது. ஆனந்த கல்லூரியின் ஹிருசன் வெறும் 10 ஓட்டங்களினை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
தர்மபால கல்லூரி இவ்வளவு குறைவான ஓட்டங்களுடன் சுருண்டதால் போட்டியின் முதல் நாளிலேயே ஆனந்த கல்லூரி தமது இரண்டாம் இன்னிங்சினை தொடங்கியது. அந்தவகையில் போட்டியின் முதல் நாளின் நிறைவில் ஆனந்த கல்லூரி வீரர்கள் இரண்டாம் இன்னிங்சில் 106 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து வலுவான நிலையில் காணப்படுகின்றனர்.
போட்டியின் சுருக்கம்
ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 136 (48.4) டில்ஷான் டி சில்வா 4/34, சமிந்து சமரசிங்க 4/36
தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 42 (16.2) ஷமல் ஹிருசன் 6/10, துஷான் ஹெட்டிகே 3/07
ஆனந்த கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 106/1 (26) துஷான் ஹெட்டிகே 54*, கனிஷ்க குணத்திலக்க 46*
ஆட்டத்தின் இரண்டாம் நாள் நாளை தொடரும்