கிரிக்கெட் விளையாட்டின் பித்துக்காலமான மார்ச் மாதத்தை அலங்கரிக்கும் பாடசாலைகள் இடையிலான மூன்று மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் இன்று (23) நிறைவுக்கு வந்திருக்கின்றது.
றிச்மண்ட் கல்லூரி எதிர் மஹிந்த கல்லூரி
காலி றிச்மண்ட் கல்லூரி மற்றும் மஹிந்த கல்லூரி அணிகள் இடையிலான இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மஹிந்த கல்லூரி அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றியினை சுவைத்தது.
ருசிரு, சிஹான் ஆகியோரின் சதத்தினால் வலுப்பெற்றிருக்கும் புனித செர்வதியஸ் கல்லூரி
கிரிக்கெட்டின் பித்துக்காலமான மார்ச் மாதத்தை அலங்கரிக்கும்….
காலி சர்வதேச மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகிய இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பாடிய றிச்மன்ட் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
றிச்மன்ட் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக திலுக் சந்தருவன் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்க, குஷான் மதுஷ மஹிந்த கல்லூரி அணியின் பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 171 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மஹிந்த கல்லூரி அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 44.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களுடன் அடைந்தது. மஹிந்த கல்லூரி அணியின் வெற்றியினை நவோத் பராணவிதான 35 ஓட்டங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தார்.
இதேநேரம் றிச்மன்ட் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக திலும் சுதீர 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி மஹிந்த கல்லூரி அணிக்கு அழுத்தம் தந்திருந்த போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.
போட்டியின் சுருக்கம்
றிச்மன்ட் கல்லூரி – 170/7 (50) – திலுக் சந்தருவன் 45*, குஷான் மதுஷ 2/32
மஹிந்த கல்லூரி -171/7 (44.2) – நவோத் பராணவிதான 35, திலும் சுதீர 3/19
முடிவு – மஹிந்த கல்லூரி அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி
மொரட்டுவ மகா வித்தியாலயம் எதிர் ஸ்ரீ சுமங்கல கல்லூரி
மொரட்டுவ டி சொய்ஸா மைதானத்தில் இன்று (23) நிறைவுக்கு வந்த இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.
தங்கங்களின் சமர் என அழைக்கப்படும் மொரட்டுவ மகா வித்தியாலயம் மற்றும் பாணந்துறை ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணிகள் இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டி நேற்று (22) 67 ஆவது தடவையாக ஆரம்பமாகியது.
போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸில் 192 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
45 ஆவது ஒருநாள் சமரில் வென்றது புனித ஜோசப் கல்லூரி
புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கு……..
இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய மொரட்டுவ மகா வித்தியாலய அணியினர் 131 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். மொரட்டுவ மகா வித்தியாலய அணியின் துடுப்பாட்டத்தில் மதுஷன் திலுக்ஷன அரைச்சதம் ஒன்றுடன் 50 ஓட்டங்களை குவிக்க, அனுக ஜயசிங்க ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் 4 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
தொடர்ந்து 61 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணி 124 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
Photos: 67th Battle of the Golds | Sri Sumangala College vs Moratu Maha Vidyalaya – Day 2
ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பாக இமேத் கம்பொல 31 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்ய மொரட்டுவ வித்தியாலய அணியின் றசான் கவிஷ்க 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 169 ஓட்டங்களை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த மொரட்டுவ மகா வித்தியாலய அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் போது இரண்டாம் நாள் ஆட்ட நேரம் நிறைவுக்கு வர, போட்டி சமநிலை அடைந்தது.
ஆட்டம் சமநிலை அடையும் போது மொரட்டுவ மகா வித்தியாலய அணி 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
ஸ்ரீ சுமங்கல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 192 (67.4) – தரன டி சில்வா 71, ஜனிது இந்துவர 51, சமல்க பெர்னாந்து 2/10
மொரட்டுவ மகா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 131 (51) – மதுஷ திலுக்ஷன 50, அனுக ஜயசிங்க 4/44
ஸ்ரீ சுமங்கல கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 124/7d (54) – இமேத் கம்பொல 31, றஷான் கவிஷ்க 3/22
மொரட்டுவ மகா வித்தியாலயம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 37/4 (13)
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது
மலியதேவ கல்லூரி, குருநாகலை எதிர் புனித ஏன்ஸ் கல்லூரி, குருநாகலை
குருநாகல் பாடசாலைகளான மலியதேவ கல்லூரி மற்றும் புனித ஏன்ஸ் கல்லூரிகள் இடையிலான இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியும் சமநிலை அடைந்தது.
குன்றுகளின் சமர் (BATTLE OF THE ROCKS) என அழைக்கப்படும் இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி நேற்று (22) குருநாகல் வெலகதர மைதானத்தில் 35 ஆவது தடவையாக தொடங்கியது.
மலியதேவ மற்றும் புனித ஏன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட…
இரண்டு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மலியதேவ அணியினர் 172 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸில் குவித்தனர். மறுமுனையில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய புனித ஏன்ஸ் கல்லூரி அணி 278 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
புனித ஏன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் கவிந்து ரணசிங்க 64 ஓட்டங்களையும், லசித் வர்ணகுலசூரிய 55 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். அதேநேரம் மலியதேவ கல்லூரி அணியின் பந்துவீச்சில் பிரையன் கருணாநாயக்க மற்றும் விதத் படபொல ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
தொடர்ந்து 106 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மலியதேவ கல்லூரி அணி 109 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்து போட்டியும் சமநிலை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 172 (53) – ஷாலுக்க அட்டபத்து 48, விதத் படபொல 32, றிசித பெரேரா 4/15, பசிந்து தென்னக்கோன் 3/53
புனித ஏன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 278/9d (94.2) – கவிந்து ரணசிங்க 64, லசித் வர்ணகுலசூரிய 55, பிவிது பெர்னாந்து 36, பிரையன் கருணாநாயக்க 2/30, விதத் படபொல 2/45
மலியதேவ கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 109/3 (28) – கவின் பண்டார 28*, சுப்புன் சுமனரத்ன 27
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.
புனித செர்வஷியஸ் கல்லூரி, மாத்தறை எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை
மாத்தறை பாடசாலைகளான புனித தோமியர் கல்லூரி மற்றும் புனித செர்வஷியஸ் கல்லூரி அணிகள் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி நேற்று (22) உயனவத்தை மைதானத்தில் 119ஆவது தடவையாக ஆரம்பமானது.
2019 ஐ.பி.எல் தொடரில் நிகழ்த்தப்படவுள்ள அரிய சில சாதனைகள்
ஐ.பி.எல் டி-20 தொடரின் 12 ஆவது அத்தியாயம் சென்னையில் இன்று…..
நீலங்களின் சமர் என அழைக்கப்படும் இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித செர்வஷியஸ் கல்லூரி அணி ருசிரு லக்வின் (128*) மற்றும் சிஹான் கலிந்து (114) ஆகியோரின் சதங்களோடு 351 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து பலம் பெற்று காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி அணிக்கு ஹரிந்து ஜயசேகர சதமொன்றை கடந்து 105 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இவரது சத உதவியுடன் போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது புனித தோமியர் கல்லூரி அணி 286 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து ஸ்திரமான நிலை ஒன்றில் காணப்படுகின்றது.
புனித செர்வஷியஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் சேதக்க தெனுவன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
புனித செர்வஷியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 351/6d (79) – ருசிரு லக்வின் 128*, சிஹான் கலிந்து 114 சஷிக்க துல்ஷான் 45, ஹிரந்த லக்ஷான் 2/17, சச்சிர ரஷ்மிக்க 2/78
புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 286/6 (99) – ஹரிந்து ஜயசேகர 105, மிஹிசால் அமோத 58, செத்தக்க தெனுவன் 24/2
போட்டியின் மூன்றாம் மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<