லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் டிசம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டி உட்பட லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு R.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் கொழும்பு மற்றும் ஜப்னா அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி இரவு 07.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. அதேநேரம், போட்டி தொடருக்கான முழு அட்டவணையையும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
மீண்டும் கிரிக்கெட் ஆட தயாராக உள்ள அஞ்செலோ மெதிவ்ஸ்
லீக் போட்டிகளில் 20 போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என்பன ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. டிசம்பர் 23ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதுடன், 24ஆம் திகதி இறுதிப்போட்டிக்கான மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முதற்தர லீக் தொடரான LPL தொடரில், மொத்தமாக 24 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், உள்ளூர் மற்றும் சர்வதேசத்தை சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முதல் சுற்றில் அதிக புள்ளிகளை பெற்று, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், குவாலிபையர் போட்டியில் (தகுதிப்) விளையாடும் என்பதுடன், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் (விலகல்) போட்டியில் விளையாடும்.
குவாலிபையர் போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதுடன், எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணி, முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் மோதவேண்டும். குறித்த போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் .
லங்கா பிரீமியர் லீக், டிசம்பர் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், வீரர்கள் வரைவு இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
திகதி | பி.ப. 03.00 மணிக்கான போட்டி | இரவு 07.30 இற்கான போட்டி | மைதானம் | ||||||
டிசம்பர் 3, 2021 | பயிற்சி | ||||||||
டிசம்பர் 4, 2021 | பயிற்சி | ||||||||
டிசம்பர் 5, 2021 | ஆரம்ப நிகழ்வு | காலி | ஜப்னா | கொழும்பு | |||||
டிசம்பர் 6, 2021 | தம்புள்ள | கண்டி | கொழும்பு | காலி | கொழும்பு | ||||
டிசம்பர் 7, 2021 | ஜப்னா | தம்புள்ள | கண்டி | காலி | கொழும்பு | ||||
டிசம்பர் 8, 2021 | கொழும்பு | தம்புள்ள | கண்டி | ஜப்னா | கொழும்பு | ||||
டிசம்பர் 9, 2021 | ஓய்வு மற்றும் பயிற்சி | ||||||||
டிசம்பர் 10, 2021 | தம்புள்ள | காலி | ஜப்னா | கொழும்பு | கொழும்பு | ||||
டிசம்பர் 11, 2021 | காலி | கண்டி | கொழும்பு | தம்புள்ள | கொழும்பு | ||||
டிசம்பர் 12, 2021 | ஜப்னா | கண்டி | காலி | கொழும்பு | கொழும்பு | ||||
டிசம்பர் 13, 2021 | காலி | தம்புள்ள | கொழும்பு | ||||||
டிசம்பர் 14, 2021 | கண்டி | கொழும்பு | தம்புள்ள | ஜப்னா | கொழும்பு | ||||
டிசம்பர் 15, 2021 | ஓய்வு மற்றும் பயிற்சி | ||||||||
டிசம்பர் 16, 2021 | கொழும்பு | ஜப்னா | கண்டி | தம்புள்ள | கொழும்பு | ||||
டிசம்பர் 17, 2021 | ஜப்னா | காலி | கொழும்பு | கண்டி | கொழும்பு | ||||
டிசம்பர் 18, 2021 | ஹம்பாந்தோட்டைக்கு பயணம் | ||||||||
டிசம்பர் 19, 2021 | ஓய்வு மற்றும் பயிற்சி | ||||||||
டிசம்பர் 20, 2021 | எலிமினேட்டர் (3 vs 4) | குவாலிபையர் 1 (1 vs 2) | ஹம்பாந்தோட்டை | ||||||
டிசம்பர் 21, 2021 | குவாலிபையர் 2 | ஹம்பாந்தோட்டை | |||||||
டிசம்பர் 22, 2021 | ஓய்வு மற்றும் பயிற்சி | ||||||||
டிசம்பர் 23, 2021 | இறுதிப் | போட்டி | ஹம்பாந்தோட்டை | ||||||
டிசம்பர் 24, 2021 | மேலதிக நாள் | ஹம்பாந்தோட்டை | |||||||
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<