இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் உறுதி

168

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இலங்கை அணியுடன் 2020ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.  

இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் போட்டிகள், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக அமையவிருக்கின்றன. எனவே, தொடரின் ஒரு போட்டி மூலம் இரண்டு அணிகளுக்கும் 60 புள்ளிகளை பெறும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இலங்கை அரங்குகளுக்கு ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள்

இலங்கையின் ஓய்வு பெற்ற ஐந்து கிரிக்கெட்….

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலி சர்வதேச மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலும் நடைபெறவிருக்கின்றன. 

இதேவேளை, இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடருக்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் ஆடவிருக்கின்றது.   

இதில் ஒரு பயிற்சிப் போட்டி மூன்று நாட்கள் கொண்டதாகவும், ஏனைய பயிற்சிப் போட்டி நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டியாகவும் இடம்பெறவிருக்கின்றது. இந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் மோதவுள்ளது.

தற்போது, டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 5ஆம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, கடைசியாக 2018ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கை வீரர்களுடன் பங்கெடுத்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 3-0 என வைட்வொஷ் வெற்றியுடன் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப் பயண அட்டவணை

  • 2020 மார்ச் 7-9ஆம் திகதி வரை – மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி, கட்டுநாயக்க 
  • 2020 மார்ச் 12-15ஆம் திகதி வரை – முதல்தரப் போட்டி, பி. சரவணமுத்து மைதானம், கொழும்பு 
  • 2020 மார்ச் 19-23ஆம் திகதி வரை – முதல் டெஸ்ட் போட்டி – இலங்கை எதிர் இங்கிலாந்து – காலி சர்வதேச மைதானம்  
  • 2020 மார்ச் 27-31ஆம் திகதி வரை – இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஆர். பிரேமதாச மைதானம் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<