சுற்றுலா இலங்கை மகளிர் அணி மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20i தொடர்களுக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை மகளிர் அணி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த இரண்டு வகை தொடர்களுக்குமான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 4, 7, 9ஆம் திகதிகளில் நடைபெறும்.
- ஒருநாள் தொடரினை அவுஸ்திரேலியாவினை வைட்வொஷ் செய்த இலங்கை
- அவுஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட சர்வதேச T20i கிரிக்கெட் தொடர் மார்ச் 14, 16, 18ஆம் திகதிகளில் நடைபெறும்.
அதேபோல, ஒருநாள் தொடர் ஆரம்பமாவதற்கு முன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளடதுடன், இந்தப் போட்டிகளானது பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் லிங்கனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் அணி இம்மாதம் 22ஆம் திகதி நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது.
போட்டி அட்டவணை
முதல் பயிற்சிப் போட்டி – பெப்ரவரி 27 (லிங்கன்)
இரண்டாவது பயிற்சிப் போட்டி – பெப்ரவரி 28 (லிங்கன்)
முதல் ஒருநாள் போட்டி – மார்ச் 4 (நேப்பியரில்)
இரண்டாவது ஒருநாள் போட்டி – மார்ச் 7 (நெல்சன்)
மூன்றாவது ஒருநாள் போட்டி – மார்ச் 9 (நெல்சன்)
முதல் T20i – மார்ச் 14 (கிறிஸ்ட்சர்ச்)
இரண்டாவது T20i – மார்ச் 16 (கிறிஸ்ட்சர்ச்)
மூன்றாவது T20i – மார்ச் 18 (டுனெடின்)
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<