இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

396

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 T20I போட்டிகளில் விளையாடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

>> ஜனித் பொறுப்பான ஆட்டம்; தோல்வியிலிருந்து இலங்கையை மீட்ட சமீர, வெண்டர்சே

எனினும் குறித்த இந்தப் போட்டி அட்டவணையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்தமாதம் 2ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதனாத்தில் டெஸ்ட் போட்டியுடன் தொடர் ஆரம்பமாகின்றது.

அதனைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒருநாள் போட்டிகள் பெப்ரவரி 9, 11 மற்றும் 14ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இறுதியாக T20I தொடர் பெப்ரவரி 17, 19 மற்றும் 21ம் திகதிகளில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தம்புள்ள மைதானத்தில் இறுதியாக 2018ம் ஆண்டு இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்றிருந்தது. குறித்த போட்டியை தொடர்ந்து சுமார் 5 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆடவருக்கான சர்வதேச போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த மைதானத்தில் முதன்முறையாக ஆடவருக்கான சர்வதேச T20 போட்டியொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  • டெஸ்ட் போட்டி – பெப்ரவரி 2-6 (எஸ்.எஸ்.சி)
  • முதல் ஒருநாள் போட்டி – பெப்ரவரி 9 (ஆர்.பிரேமதாஸ)
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – பெப்ரவரி 11 (ஆர்.பிரேமதாஸ)
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – பெப்ரவரி 14 (ஆர்.பிரேமதாஸ)
  • முதல் T20I – பெப்ரவரி 17 (தம்புள்ள)
  • இரண்டாவது T20I – பெப்ரவரி 19 (தம்புள்ள)
  • மூன்றாவது T20I – பெப்ரவரி 21 (தம்புள்ள)

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<