ஐ.சி.சி.யில் எப்பிலியேட் உறுப்பினர், அசோசியேட் உறுப்பினர் மற்றும் முழு உறுப்பினர் என மூன்று பிரிவுகளி்ல் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் இடம் பிடித்துள்ளன.
இதில் சவுதி அரேபியா எப்பிலியேட் உறுப்பினராக கடந்த 2013ஆம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டது. அதன்பின் 2015ஆம் ஆண்டு 4350 கிரிக்கெட் வீரர்களுடன் 80 கிரிக்கெட் வாய்ப்புகளை அர்ப்பணித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதி கிரிக்கெட் சென்டர் இணை உறுப்பினராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கை தற்போது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் ஐ.சி.சி.யின் 39ஆவது இணை உறுப்பினராக சவுதி அரேபியா இணைந்துள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்