எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு விழாவை நடத்த சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் விண்ணப்பித்து உள்ளன. இதில் எந்த நாடு 2030இல் ஆசிய விளையாட்டு விழாவை நடத்தும் என்ற முடிவு எதிர்வரும் நவம்பர் மாதம் அறிவிக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 22ஆம் திகதி வரை 2030 ஆசிய விளையாட்டு விழாவை நடத்த விரும்பும் நாடுகள் விண்ணப்பிக்கலாம் என ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பு கூறி இருந்தது.
ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை மாதத்தில் என அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக்..
இந்த நிலையில், குறிப்பிட்ட திகதிக்குள் சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் 2030 ஆசிய விளையாட்டு விழாவை நடத்த விண்ணப்பித்துள்ளன.
இதன்படி, சவுதி அரேபியா தனது நாட்டின் தலைநகர் ரியாத்தில் ஆசிய போட்டிகளை நடத்த விண்ணப்பம் செய்துள்ளது. அதேபோல, கத்தார் தலைநகர் தோஹாவில் ஆசிய விளையாட்டு விழாவை நடத்த விண்ணப்பித்துள்ளது.
கடந்த 2006இல் தோஹாவில் ஏற்கனவே ஆசிய விளையாட்டு விழா நடைபெற்றுள்ளது. இறுதியாக கடந்த வருடம் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் தோஹாவில் நடைபெற்றன.
இதனிடையே, சவுதி அரேபியா இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச ரீதியிலான விளையாட்டு விழாக்களையும் நடத்தியதில்லை. இந்தமுறை தான் முதன் முதலாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த முன்வந்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் 2022க்கு ஒத்திவைப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட..
முன்னதாக, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய சம்மேளன கிண்ண கால்பந்தாட்டத் தொடரை நடத்தவதற்கு இந்தியாவுடன் சவுதி அரேபியாவும் விண்ணப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சுஹு நகரில் நடைபெற உள்ளது. அதன்பிறகு 2026 ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் அய்ச்சி – நாகோயா நகரில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து 45 நாடுகள் உறுப்பினராக உள்ள ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் ஷேக் அஹமட் அல் பஹாத் அல் சபாஹ் கூறுகையில், ”2030 ஆசிய விளையாட்டு விழாவை நடத்த இரு வலிமையான நாடுகள் முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார்.
இதனிடையே, கத்தார் ஒலிம்பிக் குழுத் தலைவர் அஷ்ஷெய்க் ஜொவான் பின் ஹமாத் அல் கருத்து வெளியிடுகையில், ”கத்தார் அரசாங்கத்தின் முழு ஆதரவோடு 21ஆவது ஆசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கான ஏலத்தில் நாங்கள் களமிறங்கியுள்ளோம்.
2006 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய பெருமை எங்களுக்கு இருந்தது. மீண்டும் ஒருமுறை இதற்கான உரிமத்தை எடுத்து ஆசிய நாடுகளை மீண்டும் நமது நாட்டிற்கு வரவேற்க வேண்டிய நேரம் இது என்று நாங்கள் நம்புகிறோம்.
இன்றைய தோஹா 2006 ஆம் ஆண்டின் தோஹாவைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானது. மேலும் 2030 ஆம் ஆண்டின் தோஹா இன்னும் மேம்பட்டதாக இருக்கும்” என தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடு அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2021 வரை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட..
இந்த நிலையில், சவூதி அரேபிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் இளவரசர் அப்துல்அஸிஸ் பின் துர்கி அல்–சவுத் கருத்து தெரிவிக்கையில், ”2030 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கான ஏலத்தில் களமிறங்கியது எமது சங்கத்தின் புதிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். இது சவுதியின் 2030 தொலைநோக்கு திட்டத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது.
2030 ஆம் ஆண்டளவில், ரியாத் நகரம் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நகரங்களில் ஒன்றாக இருக்கும். ஒட்டுமொத்த சமுதாயத்திலும் காணப்படும் விளையாட்டின் தாக்கம் மற்றும் எங்கள் விளையாட்டு வீரர்கள் தங்கள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள்” என கூறினார்.
இதன்படி, இவ்விரு நாடுகளில் 2030இல் ஆசிய விளையாட்டு விழாவை எந்த நாடு நடத்தும் என்ற முடிவு எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவின் சன்யாவில் நடைபெறுகின்ற 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்ட விழாவின் போது அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<