இளம் வீரர்களுடன் இலங்கையை எதிர்கொள்ளும் நியூசிலாந்

120

அடுத்த மாதம் இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறவுள்ள ஒருநாள், T20i தொடர்களுக்கான நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வளர்ந்து வரும் அணிகளுக்கிடையிலான ஆசியக்கிண்ணத்தின் அரையிறுதியில் இலங்கை!

இலங்கைக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது இங்கே இரண்டு போட்டிகள் கொண்ட T20i மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பவற்றில் ஆடுகின்றது 

இந்த சுற்றுப்பயணம் அடுத்த மாதம் 09ஆம் திகதி நடைபெறவுள்ள T20i தொடருடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இரு தொடர்களுக்குமான 15 பேர் அடங்கிய நியூசிலாந்தின் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வழிநடாத்தி வந்த கேன் வில்லியம்சன் பதவி விலகிய பின்னர், அவ்வணி பங்கேற்கும் முதல் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களாக இலங்கை சுற்றுப்பயணம் அமையும் நிலையில், நியூசிலாந்து தரப்பினை வழிநடாத்த சுழல்பந்து சகலதுறை வீரரான மிச்சல் சான்ட்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மறுமுனையில் அணியின் சிரேஷ்ட வீரர்களான கேன் வில்லியம்சன், டிம் செளத்தி, டெவோன் கொன்வேய், டொம் லேதம் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய வீரர்களுக்கு இலங்கை சுற்றுப்பயணத்தில் ஓய்வு வழங்கப்பட்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதேநேரம் நியூசிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்த வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரரான நேத்தன் ஸ்மித் அறிமுக வீரராக இலங்கை சுற்றுப்பயணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்து அணி 

மிச்சல் சான்ட்னர் (தலைவர்), மைக்கல் பிரஸ்வல், மார்க் சாப்மன், ஜோஸ் கிளார்க்சன், ஜேகப் டப்(f)பி, லொக்கி பெர்குஸன், ஷேக் பெள(f)ல்க்ஸ், டீன் பொ(f)க்ஸ்கிரப்ட், மிச் ஹேய், ஹென்ரி நிக்கொல்ஸ், கிளன் பிலிப்ஸ், டிம் ரொபின்சன், நேதன் ஸ்மித், இஸ் சோதி, வில் யங் 

சுற்றுப்பயண அட்டவணை 

  • முதல் T20i போட்டிநவம்பர் 09 – தம்புள்ளை 
  • இரண்டாவது T20i போட்டிநவம்பர் 10 – தம்புள்ளை  
  • முதல் ஒருநாள் போட்டிநவம்பர் 13 – தம்புள்ளை  
  • இரண்டாவது ஒருநாள் போட்டிநவம்பர் 17 – கண்டி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<