ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு அபராதம்

Indian Premier League 2021

365
IPLT20.COM

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் நேற்று (21) நடைபெற்ற போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசுவதற்கு தாமதமாக்கிய குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

IPL தொடரின் நேற்றைய (21)  போட்டியில், சஞ்சு சம்சன் தலைமையிலான ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, கே.எல்.ராஹுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

இலங்கை வரும் பாகிஸ்தான் A மற்றும் பங்களாதேஷ் U19 அணிகள்

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி திரில் வெற்றியினை பதிவுசெய்திருந்தது. குறிப்பாக போட்டியின் வெற்றி பஞ்சாப் அணி பக்கம் முழுமையாக இருந்த போதிலும், கடைசி இரண்டு ஓவர்களில் 8 ஓட்டங்களை பெறமுடியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.

இதில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக 19வது ஓவரை வீசிய முஷ்தபிசூர் ரஹ்மான் 4 ஓட்டங்களை விட்டுக்கொடுக்க, இறுதி ஓவரை வீசிய கார்த்திக் தியாகி ஒரு ஓட்டத்தை விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்காரணமாக 2 ஓட்டங்கள் வித்தியாசத்தித்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.

போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வெற்றிபெற்ற போதிலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஓவர்களை வீச தவறிய குற்றச்சாட்டுக்காக, அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு இந்திய ரூபாயில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில், 8 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் தொடர்ந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<