இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்ற பாரம்பரிய கலாச்சார விழாக்களில் ஒன்றாக விளங்குகின்ற கம்பன் கழக விருது வழங்கும் விழாவில் சுயநலமற்ற செயற்பாடுகளால் பெருமையைத் தேடிக் கொடுத்தவருக்கு வழங்கப்படுகின்ற உயர் சான்றோர் விருதை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டார்.
கம்பன் கழக விருது வழங்கும் விழாவில் விளையாட்டு வீரரொருவரை கௌரவித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இளம் வீரர்களை இனங்காண இலங்கை கிரிக்கெட்டால் விசேட திட்டம்
தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகின்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான…
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கொழும்பு கம்பன் கழகத்தின் வெள்ளி விழா இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (04) வெள்ளவத்தை இராமகிருஷ்னா மிஷன் மண்டபத்தில் நடைபெற்றன.
முத்தமிழ் துறைகளில் உலக சாதனை படைத்த ஒருவரைப் பாராட்டி அமரர் வி.டி.வி தெய்வநாயகம்பிள்ளை நினைவாக இந்த கம்பன் விருது வழங்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, உலகில் அதிகூடிய 40 ஆயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்தவரும் தென்னியாந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகருமான எஸ்.பி பாலசுப்ரமணியத்துக்கு இம்முறை இவ்விருது வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இதுஇவ்வாறிருக்க, இதன்போது சுயநலமற்ற சமூக செயற்பாடுகளால் இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்த ஆறு பேருக்கு கம்பன் கழகத்தினால் கே. விஜயபாலன் நினைவு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அந்த வரிசையில், இலங்கை கிரக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, உயர்நீதிமன்ற நீயரசர் எஸ். துறைராஜா, பிரபல எழுத்தாளர் அ. முத்துலிங்கம். பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், முன்னாள் பிரதமரின் செயலாளர் வே. சிவாஞானசோதி மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எம் நஹியா உள்ளிட்டோர் இதில் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குமார் சங்கக்கார, ”முதலில் அனைவருக்கும் வணக்கம். எனக்கு தமிழில் பேச முடியாதமைக்கு மன்னியுங்கள்.
எனது வாழ்நாளில் இன்று எனக்குக் கிடைத்த தமிழ் கலாசாரத்துடனான கௌரவிப்பை என்னால் மறக்க முடியாது. அதற்காக, கொழும்பு கம்பன் கழகத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது ஒரு அற்புதமான பாக்கியம், அற்புதமான அழைப்பு. என்னைப் பொறுத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பெரிய மனிதர்களுடன் ஒரே மேடையில் இருக்க நான் கூட தகுதியற்றவன். எனக்கு கிடைத்த வாய்ப்பால் நான் தாழ்மையுடன் இருக்கிறேன்” என தெரிவித்தார்.
இதனிடையே, அயர்லாந்தைச் சேர்ந்த கவிஞர் ஆஸ்கார் வைல்டில் கூறிய ஒரு விடயத்தை மேற்கோள் காட்டி பேசிய சங்கக்கார, ”கலைஞர் எல்லா நேரங்களிலும் விமர்சகருக்கு கல்வி கற்பிப்பார்.
மனிதநேயம் மற்றும் மனிதநேயம் வாழும் துறையில் நாம் அனைவரும் கலைஞர்களாக இருக்கட்டும், இதனால் உண்மையான மனிதனாகவும் உண்மையிலேயே ஐக்கியமாகவும் இருக்கும் மிகப் பெரிய மதிப்புகளை நம் வாழ்வின் மூலம் உலகிற்குக் காண்பிப்போம்.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்த தீர்மானம்
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில்…
இதன்மூலம், நாங்கள் எங்கள் விமர்சகர்களுக்கு கல்வி கற்பிக்கலாம் மற்றும் நம் நாட்டின் மட்டுமல்ல, நம் குழந்தைகள் மற்றும் அவர்களின் தலைவிதியையும் மாற்ற முடியும்” என குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கம்பன் புகழ் விருதுபெற்ற எஸ்.பி பாலசுப்ரமணியம் பேசுகையில், ”எனது வாழ்நாளில் இவ்வாறானதொரு கௌரவத்தை நான் எங்குமே பெற்றதில்லை.
இந்த மண்ணில் கம்பன் கழகம் என்னை கௌரவித்ததை மறக்கவே முடியாது. நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். உலகின் பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்காரவை தொலைக்காட்சியில் தான் பார்த்துள்ளேன். இன்று அவருடன் அருகில் இருந்து அவரது சாதனைகளை கேட்க முடிந்தமை பெரும் பாக்கியம். அவர் ஒரு சாதனையாளர்.
உலகின் சமாதானத் தூதுவர், சிறந்த வீரர், நல்ல மனம் படைத்தவர், அவரைக் காணக்கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க