நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர சுழல்பந்துவீச்சாளருமான சந்தீப் லமிச்சேனாவினை அந்த நாட்டின் நீதிமன்றம் குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்துள்ளது.
T20I தரவரிசையில் முதலிடம் பிடித்த வனிந்து ஹஸரங்க!
சந்தீப் லமிச்சானே சிறுமி ஒன்றை கடந்த 2022ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நேபாள நாட்டின் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனம் காணப்பட்டிருந்தார். இதற்கு அவருக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் எட்டு வருட சிறை தண்டனை வழங்கியிருந்ததுடன் ஐந்து லட்ச ரூபாய் அபராதமாகவும் செலுத்த நிர்ப்பந்தம் செய்திருந்தது.
இந்த நிலையில் குறிப்பிட்ட தீர்ப்புக்கு எதிராக லமிச்சானே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததனை அடுத்து நேபாள நாட்டின் உயர் நீதிமன்றங்களில் ஒன்று அவரை குற்றவாளி இல்லை என விடுதலை செய்துள்ளது.
அதேநேரம் T20 உலக கிண்ணத்திற்கான நேபாள அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், இம்மாதம் 25 ஆம் திகதி வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் லமிச்சானே நேபாள அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<