கிரிக்கெட் பயிற்சியாளராகும் சனத் ஜயசூரிய

207

அவுஸ்திரேலியாவின் மல்கரோவ் கிரிக்கெட் கழகம், 2021/21ஆம் ஆண்டுகளின் பருவகாலத்தின் போது தமது சிரேஷ்ட பயிற்சியாளராக செயற்பட, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜயசூரியவினை அழைத்திருக்கின்றது.

125 ஆண்டு சாதனையை முறியடித்த நியூசி. வீரர் டெவோன் கொன்வே

ஏற்கனவே, மல்கரோவ் கிரிக்கெட் கழகத்தினுடைய வீரர்களாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர்களான திலகரட்ன டில்ஷான் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவ்வணிக்கு முன்னாள் சகலதுறை அதிரடி வீரரான சனத் ஜயசூரியவின் வருகையும் பாரிய வரப்பிரசாதமாக மாறியிருக்கின்றது.

சனத் ஜயசூரிய தமது சிரேஷ்ட பயிற்சியாளராக மாறும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மல்கரோவ் கிரிக்கெட் கழகம், உலகக் கிண்ண நாயகன் ஒருவரை தாம் பயிற்சியாளராக பெற்றிருப்பது மிகப் பெரிய கெளரவம் எனக் குறிப்பிட்டிருப்பதோடு, சனத் ஜயசூரிய மூலம் தமது அணியின் இளம் மற்றும் சிரேஷ்ட வீரர்களுக்கு மிகப் பெரிய நன்மை கிடைக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றது.

உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இலங்கை வீரர்கள்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் மல்கரோவ் கிரிக்கெட் கழகம் அங்கே, டிவிஷன் – III கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…