இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரரும், தற்போதைய ஆலோசகருமான சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
சனத் ஜயசூரிய இம்மாதம் நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான தொடர் மற்றும் அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.
>>உதான, டிம் சீஃபேர்ட் அதிரடியில் கோல் மார்வல்ஸுக்கு ஹெட்ரிக் வெற்றி<<
கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக நியமிக்கப்பட்ட இவர், உயர் செயற்திறன் மையத்தின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு ஆலோசகராக செயற்பட்டதுடன், நடைபெற்றுமுடிந்த T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆலோசகராகவும் செயற்பட்டார்.
இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகினார்.
சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<