உதவிக்கரம் நீட்டியிருக்கும் சனத் ஜயசூரிய

148
Sanath Jayasuriya

கொரோனா வைரஸ் மூலம் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் வறிய மக்களுக்கு, அவர்களின் அன்றாட தேவைகளுக்காக அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வது மிகவும் கஷ்டமாக உள்ளது.

அந்தவகையில், வறிய மக்களுக்கு தேவையாக இருக்கும் அத்தியாவசிய பொருட்களின் ஒரு தொகுதி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மூலம் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை மக்களுக்கான சேவையில் இணைந்த குசல் மெண்டிஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் குழாம்

இவ்வாறு சனத் ஜயசூரிய மூலம் வழங்கி வைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மூலம்  கொழும்பைச் சேர்ந்த மிகவும் தேவையுடைய மக்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஏனைய வீரர்கள் பலரும் கொரோனா வைரஸினால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியிருக்கும் நிலையில் சனத் ஜயசூரியவும் மக்களின் தேவை தீர்க்கும் இந்த மனித நேயப் பணியில் இணைந்திருப்பது, அவரின் உதவும் மனப்பான்மைக்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 150 இற்கும் மேற்பட்டோர் நோயாளிகளாக இனங்காணப்பட்டிருக்கும் நிலையில், 5 மரணங்கள் பதிவாகியிருக்கின்றது. இதேநேரம், 27 பேர் வரையில் இந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க