இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் முழுநேர தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்தார்.
>>இலங்கை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு<<
இந்திய அணிக்கு எதிரான தொடரில் இவர் தற்காலிக தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதுடன், இங்கிலாந்து தொடர் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.
இதில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி வெற்றிக்கொண்டதுடன், இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் வெற்றியையும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 எனவும் இலங்கை அணி வெற்றிக்கொண்டது.
அதன்படி தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சனத் ஜயசூரிய எதிர்வரும் 2026ம் ஆண்டுவரை தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.
இவருடைய பதவிக்காலம் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பித்துள்ளதுடன், 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இவர் செயற்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<