முழுமையாக மேற்கிந்திய தீவுகளின் பயிற்சியாளராகும் டேரன் ஷம்மி

72
Sammy appointed West Indies' all-format coach

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பயிற்சியாளராக செயற்பட அந்நாட்டின் முன்னாள் அணித்தலைவராக செயற்பட்ட டேர்ரன் சமி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

>>சகீப் அல் ஹஸனிற்கு சர்வதேசப் போட்டிகளிலும் பந்துவீசுவதற்குத் தடை<<

அந்தவகையில் மேற்கிந்திய தீவுகள் அணியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் பயிற்றுவித்து வரும் டேர்ரன் ஷம்மி தன்னுடைய புதிய நியமனம் ஊடாக அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியினையும் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கின்றார். இதுவே அவர் மூன்று வகைப் போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சிளாளராக மாற காரணமாகியிருக்கின்றது.

அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணிப் பயிற்சியாளராக அன்ட்ரே கோலேய் செயற்பட்டு வரும் நிலையில் டேர்ரன் சமி அவரினையும் புதிய பயிற்சியாளராக பிரதியீடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியம் (CWI) அதன் புதிய நிறைவேற்று அதிகாரியாக (CEO) கிறிஸ் டேரிங்கினை நியமனம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<