இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் பாடசாலை அணிகளுக்கு இடையிலான சமபோஷ 14 வயதின் கீழ் கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிகள் இம்மாதம் (ஜூன்) 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இலங்கையின் முன்னணி நாமமான CBL சமபோஷ நிறுவனம் இம்முறையும் இந்த தொடருக்கு முழுமையான அனுசரணையை வழங்குகின்றது. இதன்மூலம் தொடர்ந்து 12 வருடங்களாக இந்த தொடருக்கு அனுசரணை வழங்கும் பெருமையையும் இந்நிறுவனம் பெறுகின்றது.
இம்முறை சுற்றுத் தொடரின் முதல் கட்டம் 25 மாவட்டங்களில் அமைந்துள்ள 32 நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன் இதில் குறைந்தது 470 ஆண்கள் அணிகளும், 130 பெண்கள் அணிகளும் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, இம்முறை சுமார் 12,000 மாணவர்கள் இந்த சுற்றுத் தொடரில் விளையாடவுள்ளனர்.
கால்பந்து விளையாட்டுடன் ஆர்வமுள்ள அனைத்து பாடசாலை வீரர்களையும் இந்த தொடரில் இணைக்கும் நோக்காக, இம்முறை தொடருக்கு ஒரு பாடசாலையில் இருந்து இரு அணிகளை இணைக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
- இலங்கை இல்லாத SAFF சம்பியன்ஷிப்; இந்தியா, பாகிஸ்தான் ஒரே குழுவில்
- றினோன் தலைவர் கிண்ணம் ஸாஹிரா கல்லூரி வசம்
- றினோன் தலைவர் கிண்ண இறுதிப் போட்டியில் ஸாஹிரா – ஹமீட் அல் ஹுஸைனி
முதல் கட்டப் போட்டிகளில் வெற்றி பெறும் 32 ஆண்கள் அணிகளும் 24 பெண்கள் அணிகளும் அடுத்த கட்டமான தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளும். தேசிய மட்டப் போட்டிகள் ஜூலை 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்பிக்க தம்புள்ளை நகரில் இடம்பெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து சமபோஷ 14 வயதின்கீழ் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறுதிப் போட்டிகள் மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டிகள் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இடம்பெறும் என்று போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொடரில் சிறந்த வீரர், வீராங்கனை மற்றும் சிறந்த கோல் காப்பாளர்களுக்கான விருதுகளும் இரு பாலாருக்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Photos – CBL Samaposha U14 Inter-School Football Championship 2023 – Press Conference
இந்த சற்றுத்தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்று புதன்கிழமை (7) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.
அங்கு கருத்து தெரிவித்த CBL நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலங்க.டி சொய்சா, ‘ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவில் ஆரம்பித்து சிறுவர்கள் மத்தியில் சிறந்த பழக்கங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம். உடலை பௌதீக ரீதியாக பலமாக வைத்திருப்பதற்கும், அனைத்து விதமான முன்னேற்றங்களுக்கும், சிறுவர்களுக்கு நல்ல பழக்கத்தைக் கற்பிப்பதற்கும் குழுவாக இணைந்து செயற்படுவதை ஊக்குவிப்பதற்கும் விளையாட்டு என்பது சிறந்த கருவியாகும். ஒரு தசாப்தத்துக்கு மேல் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்துடன் நாம் கொண்டுள்ள கூட்டாண்மையின் மூலம் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் அக்கறையுள்ள தலைமுறையை உருவாக்கத் தொடர்ச்சியாக உதவுகின்றோம் என நாம் கருதுகின்றோம்’ என்றார்.
அங்கு கருத்து தெரிவித்த இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் யூ.எஸ்.ஏ.பண்டார லீலரத்ன, ‘இந்த போட்டியானது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் பங்குபற்றி போட்டியிடுவதற்கு வாய்ப்பைப் பெறும் தனித்துவமான போட்டியாகும். 14 வயதுக்கு உட்பட்ட பிரிவானது மிகவும் முக்கியமானதும், நன்கு திட்டமிடப்பட்டதுமாகும். எனவே இந்த வருடப் போட்டிகள் சிறப்பாக நடைபெறும் என நம்புவதுடன், இந்த முயற்சிகளை வெற்றியாக்க உதவிய சமபோஷவுக்கு நன்றிகள்’ என்றார்.
இந்த நிகழ்வின்போது இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்தின் இணையத்தளமும் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
சமபோஷ 14 வயதின்கீழ் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் அண்கள் பிரிவின் நடப்புச் சம்பியன்களாக கின்னியா மத்திய கல்லூரி அணியும் பெண்கள் பிரிவின் நடப்புச் சம்பியன்களாக யாழ்ப்பாணம் மகாஜன கல்லூரியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<