நாட்டின் பிரபல தானிய உணவு உற்பத்தியாளர்களான சமபோசவின் அனுசரணையில் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண விளையாட்டு விழா எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பிளெண்டி பூட் பிரைவட் லிமிட்டட் நிறுனத்தின் பிரபல உற்பத்தியான சமபோசவின் அனுசரணையில் வட மத்திய, வட மேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களை கவனத்தில் கொண்டு இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
>>பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானிக்கு ஏமாற்றம்
மேற்குறிப்பிட்ட ஐந்து மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் சமபோச மாகாண பாடசாலை விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதுடன், போட்டிகள் ஆகஸ்ட் 21ம் முதல் செப்டம்பர் 13ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
மாகாண கல்வி அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் 2000 பாடசாலைகளை சேர்ந்த 18000 மாணவர்கள் 70 விளையாட்டு நிகழ்வுகளில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். போட்டிகள் வெற்றிபெறும் பாடசாலைகள் மற்றும் மாணவர்களுக்கு கிண்ணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் என்பன வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட கல்வி பணிப்பாளர் அதுல விஜேவர்தன, “பாடசாலை மாணவர்கள் உடல் மற்றும் உளவியல் ரதீயாக சக்தி பெறுவதற்கும், அவர்களுடைய திறமைகளை தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு தங்களுடைய ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ள CBL சமபோசவுக்கு எம்முடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்” என்றார்.
>>விதிமுறைகளை மீறிய அருண தர்ஷனவிற்கு ஏமாற்றம்
ஊவா மாகாணத்துக்கான போட்டிகள் ஆகஸ்ட் 21ம் திகதி முதல் 24ம் திகதிவரை பதுளை வின்சண்ட் டயஸ் மைதானத்தில் முதன்முறையாக நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து 27ம் திகதி முதல் 30ம் திகதிவரை தென் மாகாணத்துக்கான போட்டிகள் மாத்தறை கொட்டாவில மைதானத்தில் நடைபெறவுள்ளன.
அதேநேரம் கிழக்கு மாகாணத்துக்கான மூன்றாவது சமபோச மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழா செப்டம்பர் 5 முதல் 9ம் திகதிவரை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அத்துடன், செப்டம்பர் 7 முதல் 11ம் திகதிவரை வட மேல் மாகாணத்துக்கான போட்டிகள் குருணாகல் வெலகர மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இறுதியாக செப்டம்பர் 10 முதல் 13ம் திகதிவரை வட மத்திய மாகாணத்துக்கான போட்டிகள் அனுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<