சல்மான் அகா தலைமையில் நியூசிலாந்தினை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்

17
babar-azam-resign-new-captain

சகலதுறை வீரரான சல்மான் அகா தலைமையில் நியூசிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்கெடுக்கும் பாகிஸ்தானின் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

>>சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து விலகிய ஆஸி. வீரர்<<

நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் பங்கெடுக்கவிருப்பதோடு, இதில் T20I அணியின் தலைவராகவே சல்மான் அகா நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார் 

அதேநேரம் பாகிஸ்தான் அணி தமது T20I குழாத்தில் பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்களுக்கும் ஓய்வினை வழங்கியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் மிக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த பாகிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் ரிஸ்வான், பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவராக தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதோடு, முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடிக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது 

அதேநேரம் இறுதியாக கடந்த 2024ஆம் ஆண்டிற்கான T20I உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற சதாப் கான் பாகிஸ்தான் T20I குழாத்திற்குள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதோடு அவர் அணியின் பிரதி தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

மறுமுனையில் அறிமுக வீரர்களான அப்துல் சமத், ஹசன் நவாஸ் மற்றும் மொஹமட் அலி ஆகிய வீரர்களும் பாகிஸ்தான் T20I அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்களில் அப்துல் சமத் மற்றும் ஹசன் நவாஸ் ஆகிய இருவரும் அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் என்பதோடு, மொஹமட் அலி பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் அறிமுக இளம் வேகப்பந்துவீச்சாளரான ஆகீப் ஜாவேட்டும் இணைக்கப்பட்டுள்ளார். எனினும் உபாதை காரணமாக பக்கார் சமான் மற்றும் சயீம் அய்யூப் ஆகிய வீரர்களுக்கு ஒருநாள் மற்றும் T20I குழாம்களில் வாய்ப்பு வழங்கப்படவில்லை 

பாகிஸ்தான்நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I மற்றும் ஒருநாள் தொடர்கள் மார்ச் 16ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகி, ஏப்ரல் 05 வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

பாகிஸ்தான் T20I குழாம் 

சல்மான் அகா (தலைவர்), சதாப் கான் (பிரதி தலைவர்), அப்துல் சமத், அப்ரார் அஹ்மட், ஹரிஸ் ரவூப், ஹசன் நவாஸ், ஜகன்டட் கான், குஸ்தில் சாஹ், மொஹமட் அப்பாஸ் அப்ரிடி, மொஹமட் அலி, மொஹமட் ஹரிஸ், மொஹமட் இர்பான் கான், ஒமைர் பின் யூசுப், சஹீன் சாஹ் அப்ரிடி, சுபியான் மொக்கிம், உஸ்மான் கான் 

பாகிஸ்தான் ஒருநாள் குழாம் 

மொஹமட் ரிஸ்வான் (தலைவர்), சல்மான் அலி அகா(பிரதி தலைவர்), அப்துல்லா சபீக், அப்றார் அஹ்மட், ஆகீப் ஜாவேட், பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், இமாம்-உல்-ஹக், குஸ்தில் சாஹ், மொஹமட் அலி, மொஹமட் வஸீம் Jr, மொஹமட் இர்பான் கான், நஸீம் சாஹ், சுபியான் மொக்கீம், தய்யாப் தாஹிர் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<