இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சஜித் நியமனம்

304

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், முதல்தரப் போட்டிகளில் விளையாடிய முன்னாள் நட்சத்திர வீரருமான சஜித் பெர்னாண்டோ, இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னல்களுக்கு மத்தியிலேயே வரலாற்று வெற்றி கிடைத்தது – திலான் சமரவீர

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தது …

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜுலை மாதம் 28ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து நான்கு நாட்கள் கொண்ட 3 போட்டிகளிலும், ஒற்றை ஒரு நாள் போட்டியிலும் விளையாடவுள்ளது. இதற்கான இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியை ஆயத்தப்படுத்தும் முகமாகவே முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் சஜித் பெர்னாண்டோவை முகாமையாளராக நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் 2018 மே மாதம் வரையான எட்டு மாதங்களாக இலங்கை தேர்வுக் குழுவின் உறுப்பினராக சஜித் பெர்னாண்டோ செயற்பட்டார். இடதுகை துடுப்பாட்ட வீரரான அவர், கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். 193 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 16 சதங்கள் மற்றும் 53 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 10,700 ஓட்டங்களைக் குவித்துள்ளார். எனினும், துரதிஷ்டவசமாக அவருக்கு இலங்கை தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு என்.சி.சி அணியின் பிரதான பயிற்சியாளராகக் கடமையாற்றிய அவர், இலங்கையில் உள்ள முன்னிலை பயிற்சியாளர்களில் ஒருவராகவும் தற்போது இருந்து வருகின்றார்.

எனவே, அண்மைக்காலமாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி, கழக மட்ட அணி மற்றும் தேசிய அணியுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வீரர்களை தெரிவு செய்வதில் முக்கிய பங்காற்றிய சஜித் பெர்னாண்டோ, எதிர்வரும் காலங்களில் இலங்கை அணியின் பிரதான முகாமையாளராக வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<