இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள SLC T20 League தொடரின் பணிப்பாளராக முன்னாள் வீரர் சஜித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஏ அணியின் முன்னாள் தலைவராக செயற்பட்டிருந்த சஜித் பெர்னாண்டோ, தற்போது தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிரான போட்டித் தொடரில், இலங்கை வளர்ந்து வரும் அணியின் முகாமையாளராக செயற்பட்டு வருகின்றார்.
இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சஜித் நியமனம்
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முன்னாள்..
கிரிக்கெட் சபை ஏற்கனவே லங்கன் பிரீமியர் லீக் (LPL) என்ற சர்வதேச வீரர்களை உள்ளடக்கிய T-20 தொடரொன்றை இம்மாதம் நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கான கால இடைவேளைகளையும் ஒதுக்கியிருந்த நிலையில், கிரிக்கெட் சபையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அத்தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் குறித்த கால இடைவெளியை பயன்படுத்தும் நோக்கில், உள்நாட்டு வீரர்களை மாத்திரம் இணைத்து, SLC T-20 லீக்கை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த லங்கன் பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்டை நியமித்திருந்தார்.
SLC டி-20 லீக் இம்மாத இறுதியில் ஆரம்பம்
SLC டி-20 லீக் தொடரை நடத்தும் திட்டத்தை இலங்கை கிரிக்கெட்..
எனினும் SLC T-20 லீக்கின் பணிப்பாளராக சஜித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளராகவும் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் சபையின் SLC T-20 லீக், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் செப்டம்பர் 2ஆம் திகதிவரை கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. குறித்த தொடரில் கொழும்பு, கண்டி, தம்புள்ளை மற்றும் காலி ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கவுள்ளன.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<