மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியின் போது ஐசிசியின் முதலாம் தர விதிமுறையை மீறி நடந்த குற்றச்சாட்டுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் புதுமுக வேகப் பந்துவீச்சாளர் நவ்டீப் சைனிக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டி கடந்த மூன்றாம் திகதி நடைபெற்றிருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோஹித்தின் சாதனையுடன் டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்கான கிரிகெட்….
போட்டியில், ஐ.பி.எல். தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இம்முறை விளையாடியிருந்த நவ்டீப் சைனி சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார். அறிமுகப் போட்டியில் அபாரமாக பந்துவீசிய இவர், 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்தப் போட்டியில் தன்னுடைய முதல் விக்கெட்டுக்காக, மேற்கிந்திய தீவுகள் அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர், நிக்கோலஸ் பூரனை ஆட்டமிழக்கச் செய்தார். பூரன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, சைனி ஆக்ரோஷமான முறையில் அவரை வழியனுப்பிவைத்தார்.
வீரர் ஒருவர், சக வீரர் அல்லது அதிகாரிகளுக்கு எதிராக ஆக்ரோஷமான முறையில் மைதானத்தில் வைத்து செயற்படுவது ஐசிசியின் சரத்து 2.5 விதிமுறைப்படி முதலாம் தர குற்றமாகும். குறித்த குற்றத்துக்காக நவ்டீப் சைனிக்கு ஒரு தரக்குறைப்பு புள்ளி (demerit) வழங்கப்பட்டுள்ளது.
டி20 அரங்கில் டில்சானின் சாதனையை முறியடித்த கோஹ்லி
இருதரப்பு தொடருக்காக ஐக்கிய அமெரிக்கா மற்றும்….
இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரின் இரண்டு போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான அடுத்தப் போட்டி நாளை (06) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க