டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியின் தலைவர்களாக கில், சாஹா

153
Image courtesy : ESPNcricinfo

தென்னாபிரிக்க ஏ அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இந்திய ஏ அணியின் இரு போட்டிகளுக்குமான தலைவர்களாக விக்கெட் காப்பாளர் ரித்திமன் சாஹா மற்றும் துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 

தென்னாபிரிக்க அணியானது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இந்திய அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட இரு உத்தியோகபூர்வற்ற டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது. சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான ஒருநாள் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது

T20 சர்வதேச போட்டிகளில் மாலிங்க புதிய உலக சாதனை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் இன்று (1)…..

முதல் இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இந்திய அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று (02) நடைபெறுகின்ற நிலையில், அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் குழாம் வெளியிடப்பட்டுள்ளது

இறுதியாக, இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் மண்ணுக்கு சென்று அங்கு மேற்கிந்திய தீவுகள் ஏ அணியை முழுமையாக வேட்டையாடி திரும்பிய நிலையில், தற்போது தென்னாபிரிக்க அணியை தங்களது சொந்த மண்ணிலேயே சந்திக்கின்றது. அதன்படி நடைபெறவுள்ள இரு டெஸ்ட் போட்டிகளுக்கும் தனித்தனியான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்காக 13 பேர் கொண்ட குழாம் வெளியிடப்பட்டுள்ளது. இளம் துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் தமையிலான குழாமில் சர்துல் தாகுர், மொஹமட் சிராஜ், விஜய் சங்கர் ஆகிய இந்திய அணியில் விளையாடியுள்ள வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதேவேளை, தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் இடம்பெற்று உபாதை காரணமாக இடைநடுவில் விலகிய விஜய் சங்கருக்கு டெஸ்ட் குழாமில் இவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கடந்த மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதிய டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற ருதுராஜ் கைக்வாட், அமோல்பிரீட் சிங், கே கௌதம், ஷபாஷ் நதீம் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தொடர்ந்தும் இந்திய அணிக்காக விளையாடும் வகையில் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.  

அணியின் தேவைகருதி ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினேன் – குசல் மெண்டிஸ்

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நான்காவது….

முதல் டெஸ்ட் போட்டிக்காக குழாம் 

சுப்மன் கில் (அணித்தலைவர்), ருதுராஜ் கைக்வாட், அமோல்பிரீட் சிங், ரிக்கி பூய், அன்கீட் பவ்னீ, கே.எஸ் பரத் (விக்கெட் காப்பாளர்), கே கௌதம், ஷபாஷ் நதீம், சர்துல் தாகுர், மொஹமட் சிராஜ், துஸார் தேஸ்பாண்டே, சிவம் துபே, விஜய் சங்கர் 

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாமானது அணித்தலைவர் மாற்றத்துடன் சற்று வித்தியாசமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக விளையாடியுள்ள அனுபவம் வாய்ந்த வீரர்கள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாமில் அணித்தலைவராக பெயரிடப்பட்ட சுப்மன் கில், அமோல்பிரீட் சிங், ஷபாஷ் நதீம், மொஹமட் சிராஜ், சிவம் துபே, கே கௌதம் மற்றும் விஜய் சங்கர் ஆகிய ஏழு வீரர்கள் மீண்டும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாமிலும் இடம்பெற்றுள்ளனர்

இரண்டாவது டெஸ்டில் சுப்மன் கில் இடம்பெற்றிருந்தாலும் அணியின் தலைமைத்துவமானது இந்திய தேசிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரித்திமன் சாஹாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்திய டெஸ்ட் அணியில் அண்மைக்காலமாக சாஹாவின் இடத்தை ரிஷப் பண்ட் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் 77 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிலையில் தற்போது டெஸ்ட் அணியிலும் உள்வாங்கப்பட்டுள்ளார். அதேபோன்று, 123 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வேகப் பந்துவீச்சாளர் உமேஸ் யாதவ் தொடர்ந்தும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.  

மெண்டிஸின் அபார ஆட்டத்தை வீணடித்து நியூசிலாந்து அணி வெற்றி

சுற்றுலா நியூசிலாந்து மற்று இலங்கை அணிகளுக்கு…..

2016ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்று தொடர்ந்தும் அணியின் வாய்ப்பு கிடைக்காமல் காணப்பட்ட துடுப்பாட்ட வீரர் கருண் நாயர் இந்தியாவில் நடைபெற்றுவரும் டுலீப் கிண்ண தொடரில் பிரகாசித்ததன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாமில் இடம்பெற்றுள்ளார்

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக குழாம்  

ரித்திமன் சாஹா (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), பிரியங் பஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், அமோல்பிரீட் சிங், கருண் நாயர், கே கௌதம், குல்தீப் யாதவ், ஷபாஷ் நதீம், விஜய் சங்கர், சிவம் துபே, உமேஸ் யாதவ், மொஹமட் சிராஜ், அவேஸ் கான்

டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை 

  • 10 – 13 செப்டம்பர் – முதலாவது போட்டி – திருவணந்தபுரம்
  • 17 – 20 செப்டம்பர் – இரண்டாவது போட்டி – திருவணந்தபுரம்  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<