நேபாளத்தின் பிராத் நகர சஹிட் ரக்ஷலா அரங்கில் நடைபெற்ற SAFF மகளிர் கால்பந்து சம்பியன்ஷிப் B குழுவுக்கான போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் 0-5 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் அயோமி விஜேரத்னவின் அபார ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி மோசமான தோல்வி ஒன்றை தவிர்த்துக் கொண்டது.
இலங்கை மகளிர் கால்பந்து அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
நேபாளத்தின் சஹீத் ரங்சாலா அரங்கில்…
இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஏற்கனவே இந்த தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகிய நிலையில் இந்தக் குழுவில் முதல் இடத்தை பிடிப்பதற்கான போட்டியாகவே இன்றைய (17) ஆட்டம் அமைந்திருந்தது. இந்தக் குழுவில் இடம்பிடித்த மாலைதீவுகள் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து வெளியேறியது.
ஒரு வலுவான அணியாக போட்டியை ஆரம்பித்த விரைவிலேயே இந்திய மகளிர்கள் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். 4ஆவது நிமிடத்தில் பந்தை கடத்திச் சென்ற சன்ஜு அதனை கிராஸ் டென்கமியிடம் செலுத்த அவர் வலைக்குள் புகுத்தினார்.
சில நிமிடங்களின் பின் மீண்டும் செயற்பட்ட சன்ஜு பந்தை கோல் கம்பத்திற்கு நெருங்கிய தூரத்தில் சன்தியா ரங்கனாதனிடம் வழங்க அவர் அதனை இந்திய அணிக்கு இரண்டாவது கோலாக மாற்றினார்.
இலங்கை விராங்கனைகளிடம் பந்து கிடைத்தபோது அதனை தமக்குள் பரிமாற்றி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க இந்திய வீராங்கனைகள் முயன்றனர். அயோமி விஜேவர்தன இந்திய அணியின் பல கோல் முயற்சிகளையும் சிறப்பாக தடுத்தார்.
ஆசிய மற்றும் சாப் கால்பந்து போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
இலங்கை தேசிய மகளிர் கால்பந்தாட்ட…
எனினும், இலங்கை பின்கள வீராங்கனைகளின் தவறை சாதகமாக்கிக்கொண்ட அந்துமதி கதிரேசன் இந்திய அணிக்காக மூன்றாவது கோலை புகுத்தினார்.
தொடர்ந்து ருஷானி குணவர்தனவின் கையில் பந்து பட்டதை அடுத்து வழங்கப்பட்ட பெனால்டியை பயன்படுத்தி சங்கீதா பேஸ்போரே இந்திய அணிக்காக நான்காவது கோலை புகுத்தினார்.
முதல் பாதி – இலங்கை 0 – 4 இந்தியா
இரண்டாவது பாதி ஆரம்பித்த விரைவிலேயே இந்திய அணி தனது ஐந்தாவது கோலையும் புகுத்தியது. ரதன்பலா தேவி பெனால்டி பெட்டிக்குள் இருந்து தனது இடது காலால் உதைத்த பந்து வலைக்குள் செல்லுபோது இலங்கை கோல்காப்பாளரால் அதனை தடுப்பதற்கான முயற்சியில் கூட ஈடுபட முடியாமல்போனது.
இந்நிலையில் இந்திய அணி மேலும் கோல்கள் பெறுவதை தடுப்பதைத் தவிர்த்து இலங்கை மகளிர்களால் செய்வதறியாது இருந்தது. நேபாளத்திற்கு எதிரான அரையிறுதிக்கு முன்னர் மோசமான தோல்வி இலங்கை அணியின் நம்பிக்கையை தளர்த்துவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எரன்தி லியனகே மாத்திரம் முன்களத்தில் நிலைகொண்டதோடு எஞ்சிய வீராங்கனைகள் பின்களத்தில் செயற்பட ஆரம்பித்தனர்.
செரண்டிப்பை வீழ்த்தி பிரிவு l சம்பியனாகியது பொலிஸ்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின்…
இலங்கை வீராங்னைகள் தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் அவர்கள் வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்தனர். எனினும் இந்திய தற்காப்பு அரண் வலுவாக இருந்ததால் பதில் தாக்குதல் தொடுப்பது கடினமாக அமைந்தது.
வீராங்கனைகள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் இலங்கை கோல்காப்பாளர் சிறப்பாக செயற்பட்டு இந்திய வாய்ப்புகளை தடுத்தார். அவ்வாறு இல்லாவிட்டால் மேலும் பல கோல்களை பெற்றுக்கொடுத்திருக்கும்.
முழு நேரம் – இலங்கை 0 – 5 இந்தியா
கோல்பெற்றவர்கள்
இந்தியா – கிராஸ் டெக்மி 4′, சந்தியா ரங்கனாதன் 7′, இந்துமதி கதிரேசன் 36′, சங்கீதா பேஸ்போர் (பனால்டி) 44′, ரடன்பலா தேவி 47′
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<