இலங்கை குழாமில் சதீர சமரவிக்ரம இணைப்பு

983

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் 4ஆம் மற்றும் 5ஆவது ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு 22 வயதுடைய வலது கை துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம அழைக்கப்பட்டிருப்பதாக நம்பகமான வட்டாரத்தின் மூலம் ThePapare.com க்கு தெரியவருகிறது.    

பாகிஸ்தானுடனான T-20 தொடரில் இருந்து விலகும் உபுல் தரங்க

இந்த மாத இறுதியில் பாகிஸ்தானின் லாஹூர் நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கெதிரான T-20 போட்டியில் …

இம்மாத ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டுபாயில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது கன்னி டெஸ்டில் ஆடிய சமரவிக்ரம மூன்றாவது வரிசையில் களமிறங்கி இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 38 மற்றும் 13 ஓட்டங்களை பெற்று அணியில் அதிக தாக்கத்தை செலுத்தி இருந்தார்.

அனைத்து பக்கங்களுக்கும் பந்தை அடித்தாடும் திறமை கொண்ட சமரவிக்ரம மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளின் ஆரம்ப வரிசையில் வேகமாக ஓட்டங்களை பெறக்கூடியவராவார். அவர் இலங்கை ‘A’ குழாமின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டபோதும் விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அங்கு பயணிக்க முடியாதிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரம் ThePapare.com க்கு தெரிவித்தது.

புனித ஜோசப் கல்லூரியின் முன்னாள் மாணவரான சமரவிக்ரம இலங்கை கிரிக்கெட் சபையால் நடாத்தப்பட்ட இந்த ஆண்டின் மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடரில் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவானார். அந்த தொடரில் அவர் காலி அணிக்காக 7 போட்டிகளில் ஆடி 343 ஓட்டங்களை பொற்றார். அதில் இரண்டு சதங்களுடன் 49 ஓட்ட சராசரியை பதிவு செய்தார். தனது 22 A நிலை போட்டிகளில் அவர் 27.52 என்ற ஓட்ட சராசரியை பெற்றிருப்பதோடு 88.19 என்ற அரோக்கியமான ஓட்ட வேகத்தையும் கொண்டுள்ளார்.

டெஸ்ட் சம்பியன்ஷிப், ஒரு நாள் லீக் என்பவற்றுக்கு ICC ஒப்புதல்

டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் சர்வதேச லீக் கிரிக்கெட் போட்டிகளை நடாத்தும் திட்டத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் …

ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை தோல்வி கண்டிருக்கும் நிலையிலேயே தேர்வாளர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி தற்போது 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் 4ஆவது மற்றும் 5ஆவது ஒருநாள் போட்டிகள் ஒக்டோபர் 20ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளன.