அஞ்செலோ மெதிவ்ஸிற்கு பதிலாக இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம

2134

உபாதைக்குள்ளாகியிருக்கும் இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு பதிலாக, நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் விளையாட இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரமவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து, ஆஸி தொடர்களிலிருந்து வெளியேறும் மெதிவ்ஸ்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான …..

கிறிஸ்ட்சேர்ச் நகரில் இடம்பெற்ற நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான இராண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிக் கொண்டிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் தனது இடது தொடையில் உபாதை ஒன்றினை எதிர் கொண்டிருந்தார்.   

குறித்த உபாதை காரணமாக நான்காம் நாளின் தேநீர் இடைவேளையின் போது மைதானத்தினை விட்டு வெளியேறிய மெதிவ்ஸ் அதனை அடுத்து போட்டியின் ஐந்தாம் நாளிலும் இலங்கை அணிக்காக துடுப்பாட வந்திருக்கவில்லை. இப்படியான ஒரு நிலையில் நேற்று (30)  மெதிவ்ஸ் தொடர்பான வைத்திய பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்தன.

குறித்த வைத்திய பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்துவரும் நான்கு வாரங்களுக்கு மெதிவ்ஸினால் கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இந்த உபாதை அஞ்செலோ மெதிவ்ஸிற்கு ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பமாகும், நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடர், அதனை அடுத்து இடம்பெறவுள்ள T20 தொடர் என்பவற்றில் விளையாடும் வாய்ப்பினை இல்லாமல் செய்திருக்கின்றது.  

மெதிவ்ஸுக்கு துடுப்பாட்ட ஆலோசனை வழங்கிய குமார் சங்கக்கார

நியூசிலாந்து அணியுடனான முதலாவது …..

இவ்வாறாக மெதிவ்ஸ் இலங்கை அணியிலிருந்து வெளியேற, சதீர சமரவிக்ரமவுக்கு நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் இலங்கை அணிக்காக விளையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

இலங்கை அணிக்காக இதுவரையில் ஆறு ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள 23 வயதேயான சதீர சமரவிக்ரம, அண்மையில் கொழும்பில் இடம்பெற்று முடிந்த இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியொன்றினை பெற அரைச்சதம் ஒன்றுடன் உதவியிருந்தார்.

அதேநேரம், சதீர சமரவிக்ரம அண்மையில் இடம்பெற்று முடிந்த உள்ளூர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் சிறப்பான பதிவுகளை காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.