பாகிஸ்தான் அணியுடன் ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் மோதுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் பயணிக்கவுள்ள இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம மற்றும் ரோஷன் சில்வா ஆகிய அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஞாயிற்றுக்கிழமை (20) இலங்கை அணி ஐக்கிய இராச்சியம் பயணிக்கவுள்ளது. இத்தொடரில் இலங்கை சார்பாக ஆடவுள்ள 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை புதிதாக நியமனம் செய்யப்பட்ட கிரஹம் லப்ரோய் தலைமையிலான தேசிய அணியின் தேர்வுக்குழாம் இன்று (20) வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான முதல் டெஸ்டில் மெதிவ்ஸ் விளையாடுவதில் சந்தேகம்
ஐக்கிய அரபு இராட்சியத்தின் அபு தாபி நகரில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் அணியுடனான
செப்டம்பர் 28ஆம் திகதி அபுதாபி நகரில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகின்றது. டுபாயில் ஆரம்பமாகும் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, இலங்கை அணி விளையாடவுள்ள முதலாவது பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக அமையவுள்ளது.
நீண்ட கால எதிர்பார்ப்பாக காணப்பட்ட 22 வயதேயான இளம் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம முதன்முறையாக இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பினை இத்தொடர் மூலம் பெற்றுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் 2016/17 ஆம் ஆண்டின் பருவகாலத்தில் நடாத்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 1016 ஓட்டங்களினை (6 அரைச் சதங்கள் மற்றும் 3 சதங்களுடன்) கொல்ட்ஸ் அணிக்காக குவித்த சதீர சமரவிக்ரம அத்தொடரில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரராக பதிவாகியிருந்தார்.
உள்ளூர் போட்டிகளின் துடுப்பாட்ட ஜாம்பவானாக திகழும் ரோஷென் சில்வாவும் இத்தொடர் மூலம் இலங்கை அணிக்கு முதற்தடவையாக அழைக்கப்பட்டுள்ளார். முதல்தரப் போட்டிகளில் 10 வருடங்களுக்கு மேலான அனுபவத்தினை கொண்டிருக்கும் சில்வா 100 இற்கு மேலான போட்டிகளில் ஆடி 18 சதங்களுடன் 26 அரைச் சதங்களினையும் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் பயிற்சியின்போது தொடை தசையில் ஏற்பட்ட உபாதை காரணமாக தொடரில் உள்ளடக்கப்படவில்லை. மெதிவ்சின் இடத்தினை நிரப்பும் விதமாகவே ரோஷென் சில்வாவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறைந்த உயரம் கொண்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கெளசால் சில்வாவுக்கு இலங்கை அணியின் ஆரம்ப வீரராக மீண்டும் வருவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இலங்கைக்காக இறுதியாக தென்னாபிரிக்க அணியுடனான சுற்றுப் பயணத்தில் ஆடியிருந்த சில்வா, இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப வீரர் உபுல் தரங்க டெஸ்ட் போட்டிகளில் இருந்து 6 மாதங்களுக்கு ஓய்வினை எடுத்துக்கொண்டதன் காரணமாகவே அணிக்கு மீண்டும் நுழையும் சந்தர்ப்பத்தினை பெற்றிருக்கின்றார்.
2019 உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெற்ற இலங்கை அணி
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண
இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரில் இரண்டு பெறுமதியான அரைச் சதங்களை குவித்து தனது திறமையினை வெளிக்காட்டியிருந்த அழகிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான லஹிரு திரிமான்னவும் இந்த தொடர் மூலம் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாட சந்தர்ப்பத்தினை பெற்றுள்ளார். திரிமான்ன கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தில்ருவான் பெரேரா இந்திய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் கைப்பற்றியிருப்பினும் இலங்கை அணிக் குழாத்தில் தனது இடத்தில் நீடிக்கின்றார். இவருடன் சேர்ந்து அணியின் சுழல் பந்துவீச்சு துறையினை ரங்கன ஹேரத் மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் வலுப்படுத்துவர்.
வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தமது உபாதைகளிலிருந்து மீண்டு பூரண உடற்தகுதியுடன் காணப்படுவதால் அவர்கள் லஹிரு கமகே மற்றும் இடது கை பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாந்துவுடன் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியுடனான தொடரில் இலங்கையில் காணப்பட்ட இடது கை சுழல் வீரர் மலிந்து புஷ்பகுமார மற்றும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இலங்கை டெஸ்ட் குழாம்
திமுத் கருணாரத்ன, கெளசால் சில்வா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்ன (உப தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், நுவன் பிரதீப் , லஹிரு கமகே, விஷ்வ பெர்னாந்து, ரோஷேன் சில்வா, லக்ஷன் சந்தகன், மலிந்த புஷ்பகுமார