மாலிங்கவுக்கு வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய சச்சின் டெண்டுல்கர்

1632
Image courtesy - cricketcountry

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

T20 போட்டிகள் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பாகிஸ்தான் வீரர்

கரீபியன் பிரிமியர் லீக் (CPL) T20 தொடரில்….

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இன்று (28) தனது 35வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றார். எனவே, இவருக்கு இலங்கை ரசிகர்கள் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்தில் உள்ள மாலிங்க ரசிகர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில், வித்தியாசமான பாணியில் பந்து வீசும் லசித் மாலிங்க, யோர்க்கர்” பந்துகளை வீசுதில் தனித்துவமான திறமையை கொண்டவர். சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை, தனது வேகத்தால் கட்டுப்படுத்தியவர் மாலிங்க என்றால் அது மிகையாகாது.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் எதிர் எதிர் அணிகளுக்காக விளையாடியுள்ளனர்அத்துடன் .பி.எல். தொடரில் இருவரும் இணைந்து 5 வருடங்கள் மும்பை அணிக்காக ஒரே உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டவர்கள். எனவே, இவர்களுக்கு இடையிலான நெருக்கமும் அதிகம்.

இந்நிலையில் இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் லசித் மாலிங்கவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் சமுக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே சச்சின் டெண்டுல்கர், பிறந்தநாள் கொண்டாடும் மாலிங்கவுக்கு சற்று நகைச்சுவையாக வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்தில், “மாலிங்கவின் பந்து வீச்சை எதிர்த்து துடுப்பெடுத்தாடுபவர்களுக்கு நான் எப்பொழுதும் கூறுகிறேன். அவரது தலைமுடியை பார்க்காதீர்கள். பந்தை பார்த்து துடுப்பெடுத்தாடுங்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

லசித் மாலிங்கவின் சிகை அலங்காரம் ஏனைய வீரர்களை விட சற்று வித்தியாசமானது. கிரிக்கெட்டில் இவரது சிகை அலங்காரம் பிரபலமான ஒன்று. கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட வரும் ரசிகர்களில் பலர் இவரை போன்ற சிகை அலங்காரத்தை, செயற்கையாக செய்துகொண்டு மைதானத்துக்கு வருவதை நாம் அதிகமாக பார்க்க முடியும்.  

இதனால் மாலிங்கவின் சிகை அலங்காரத்தை கலாய்க்கும் விதமாகவே, இவ்வாறான வாழத்துச் செய்தியினை சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<