5 ஆயிரம் பேருக்கு ஒரு மாத உணவுப்பொருள் வழங்கிய சச்சின்

154

மும்பையில் சுமார் 5000 பேருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸுக்கு எதிரான மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்

இதில் இந்திய கிரிக்கெட் சபை (51 கோடி), சுரேஷ் ரெய்னா (52 இலட்சம்), சச்சின் டெண்டுல்கர் (50 இலட்சம்), ரோஹித் சர்மா (80 இலட்சம்) யுவராஜ் சிங் (50 இலட்சம்ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்

கௌண்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட செட்டேஸ்வர் புஜாரா!

இங்கிலாந்தில் நடைபெறவிருந்த….

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி, அனுஷ்கா சர்மா ஆகியோர் சேர்ந்து தொகை குறிப்பிடாமல் நிதியுதவி அளித்தனர்

முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளே (தொகை குறிப்பிடவில்லை), இந்திய பெண்கள் அணியின் மிதாலி ராஜ் ரூ. 10 இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதற்கிடையில் ஏற்கனவே நிதியுதவி அளித்த சச்சின் தற்போது மும்பையில் வசிக்கின்ற 5000 பேருக்கு தேவையான ஒரு மாத உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான செலவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

சச்சின் இந்த உலர் பொருட்களுக்கான செலவினை மும்பை சிவாஜி நகர், கோவந்தி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு அப்னாலயா தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வழங்குகிறார். இதை அப்னாலயா என்ற தனியார் தொண்டு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கம் மூலம் உறுதி செய்துள்ளது.

லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான உதவி செய்த சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி. ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் பேருக்கு உணவு வழங்கும் பொறுப்பை அவர் எடுத்துள்ளார். மேலும் ஏராளமான நபர்கள் இதுபோன்று உங்களுடைய ஆதரவை மக்களுக்கு கொடுக்க வேண்டும்என அப்னாலயா என்ற அமைப்பு தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சச்சினும் அதற்கு மறுபதிவு செய்து அப்னாலயா அமைப்பு தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உதவிகள் தேவைப்படுவோருக்கும் தொடர்ந்து உதவ வேண்டும். உங்களது சேவை தொடரட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை இந்தியாவில் 7600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 249 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<