மோசமான நடத்தையினால் ஒப்பந்தத்தை இழந்த சபீர் ரஹ்மான்

669
sabbir rahman

முதற்தரப் போட்டியொன்றின்போது தன்னை கேலி செய்த 12 வயது சிறுவனொருவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மானுக்கு 25 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆறு மாதங்களுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக தேசிய அணியுடனான அவருடைய ஒப்பந்தத்தை குறித்த காலப்பகுதி வரை தற்காலிகமாக இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக நடுவர்களில் குமார் தர்மசேனவுக்கு 14ஆவது இடம்

இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது நடாத்தி வரும்..

சபீர் ரஹ்மானின் சொந்த ஊரான ராஜ்ஷாஹியில் டாக்கா மெட்ரோ பொலிஸ் அணிக்கெதிரான தேசிய கிரிக்கெட் லீக் போட்டியின் இரண்டாம் நாளான கடந்த மாதம் 21ஆம் திகதி ஆட்டத்தின்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.  

இப்போட்டியின் போது 12 வயது சிறுவன் ஒருவர் சபீர் ரஹ்மானை கேலி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து ரஹ்மான் இன்னிங்ஸ் இடைவெளியின் போது பின்னாலுள்ள திரைக்குப்பின்னால் சென்று குறித்த சிறுவனை அடித்து உதைத்துள்ளார். இதனை நடுவரொருவர் அவதானித்து போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் போட்டி மத்தியஸ்தர் சபீரை விசாரணைக்கு அழைத்த போது அவரையும் சபீர் கடுமையாகத் திட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று செயற்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது தனது மோசமான நடத்தை தொடர்பில் சபீர் ரஹ்மான் மன்னிப் கோரியுள்ளார். இதனையடுத்து சபீர் ரஹ்மானுக்கான தண்டனைகளை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் அறிவித்திருந்தார்.

அதேநேரம், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இதுதொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து வீரர்களுக்கும் கடுமையான செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம், அதுவும் புதுவருடத்திலும். ஒருவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி அவர் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட்டவராக இருப்பது அவசியம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தனக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை சபீர் ரஹ்மான் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு

இலங்கை மற்றும் பங்களாதேஷ்…

முன்னதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியலில், பி பிரிவில் இடம்பெற்றிருந்த சபீர் ரஹ்மான் கடந்தாண்டு 30 ஆயிரம் டொலர்களைப் பெற்றிருந்தார். இதனையடுத்து பங்களாதேஷ் வீரர்களுக்கான தேசிய ஒப்பந்தம் 2018 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்த நிலையில் சபீர் ரஹ்மான் தனது மோசமான நடத்தையினால் அதனை இழந்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளின் போது இவ்வாறான சர்ச்சைகளில் சபீர் ரஹ்மான் சிக்குவது புதிதல்ல. முன்னதாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில், மோசமானதொரு ஒழுக்க மீறலொன்றுக்காக 16 ஆயிரம் டொலர்கள் அபராதமும், ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 30 சதவீத அபராதமும் சபீர் ரஹ்மானுக்கு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

26 வயதான சபீர் ரஹ்மான் 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை 10 டெஸ்ட், 46 ஒரு நாள் மற்றும் 33 T-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சிறுவனை தாக்கிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு போட்டித்தடை