நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஸ்டீபன் குக் மற்றும் டீன் எல்கர் ஆகியோர் களம் இறங்கினார்கள். குக் 20 ஓட்டங்கள் எடுத்தும், எல்கர் 19 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தார்கள். அதன்பின் வந்த அம்லா 53 ஓட்டங்கள் சேர்த்தார்.
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழக்க தென்ஆப்பிரிக்கா அணி 77.4 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது வெளிச்சம் இல்லாமல் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
ரபாடா 14 ஓட்டங்களுடனும், ஸ்டெயின் 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி சார்பில் வாக்னர் மூன்று விக்கட்டுகளும், போல்ட், சான்ட்னெர் தலா 2 விக்கட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
போட்டியின் சுருக்கம்
தென் ஆபிரிக்கா – 236/8
ஹசீம் அம்லா 53, தெம்பா பாவுமா 46, குயின்டன் டி கொக் 33 , நீல் வேக்னர் 47/3, மிச்சல் சட்னர் 22/2, ட்ரெண்ட் போல்ட் 42/2
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்