பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த ரசல் டொமின்கோ தன்னுடைய பதவியில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பாகிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராகும் மிக்கி ஆர்தர்?
தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த டொமின்கோ கிறிஸ்மஸ் விடுமுறைக்காக தனது தாயகம் திரும்பியிருக்கின்றார் எனக் கூறப்பட்ட நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) அவர் பதவி விலகியிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது.
அத்துடன் முன்னதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை டொமின்கோவின் பயிற்றுவிப்பு குறித்து விமர்சனங்களை வெளியிட்ட நிலையிலேயே அவரின் பதவி விலகல் இடம்பெற்றிருக்கின்றது.
இதேநேரம் சொந்த மண்ணில் வைத்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரினை 2-0 என பறிகொடுத்து இரண்டு நாட்களின் பின்னர் ரசல் டொமின்கோவின் இராஜினமா குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
டொமின்கோ பதவி விலகிய விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ஜலால் யூனூஸ், அணியினை ஊக்குவிக்கும் ஒருவரே தமக்கு பயிற்சியாளராக தேவை எனக் கூறியிருப்பதோடு பங்களாதேஷ் அணியில் விரைவில் மாற்றங்கள் இடம்பெறும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்டீவ் ரோட்ஸின் பதவி விலகலை அடுத்து, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரசல் டொமின்கோ மாறியிருந்தார்.
ரசல் டொமின்கோவின் ஆளுகையிலான பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கிரிக்கெட் அணிகளை சொந்த மண்ணில் நடைபெற்ற T20I தொடர்களில் வீழ்த்தியதோடு, நியூசிலாந்தில் வைத்து டெஸ்ட் போட்டி ஒன்றிலும் வெற்றி பெற்றிருந்தது.
அத்துடன் டொமின்கோவின் ஆளுகையிலான பங்களாதேஷ் அணி தென்னாபிரிக்க மண்ணில் வைத்து ஒருநாள் தொடர் ஒன்றில் வெற்றி பெற்றிருந்ததோடு, பலமிக்க இந்திய அணியினையும் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
LPL 2022 தொடரை ஆக்கரமித்த பந்துவீச்சாளர்கள்
டொமின்கோ பதவி விலகிய நிலையில் பங்களாதேஷ் அணி புதிதா ஆரம்பிக்கவுள்ள புத்தாண்டுடன் மிக விரைவில் புதிய பயிற்சியாளர் ஒருவரை நியமிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<