இந்த ஆண்டு (2021) ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணியின் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ICC T20 உலகக்கிண்ணத் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம்
உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய பங்களாதேஷ் அணியில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேகப் பந்துவீச்சாளரான ருபெல் ஹொசைன், பங்களாதேஷ் அணியின் மேலதிக வீரராக மாற்றப்பட்டிருக்கின்றார்.
இதற்கு முன்னர் பங்களாதேஷ் அணியினை 28 T20I போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்திருக்கும் ருபெல் ஹொசைன் பங்களாதேஷ் அணியில் இணைக்கப்படாமல் போனமை சில விமர்சனங்களை உருவாக்கியிருக்கின்றது.
எனினும், T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகிய பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தமிம் இக்பாலிற்கு பிரதியீடாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பிரகாசிக்காது போன சௌம்யா சர்க்கர் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.
இவர்கள் தவிர மொசாதிக் ஹொசைன், தய்ஜூல் இஸ்லாம், அமினுல் இஸ்லாம் ஆகிய வீரர்களும், மொஹமட் மிதுனும் பங்களாதேஷின் T20 உலகக் கிண்ண குழாத்தில் முன்னணி வீரர்களாக இணைக்கப்பட்டிருக்கவில்லை.
ICC T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு
T20 உலகக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் அணியினை மஹமதுல்லா வழிநடாத்த, அவருக்கு பக்க பலமாக சகீப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம் மற்றும் லிடன் தாஸ் குமார் ஆகிய வீரர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் உலகக் கிண்ண அணி – மஹமதுல்லா (அணித்தலைவர்), சகீப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், அபிப் ஹொசைன், மொஹமட் நயீம், நுரூல் ஹசன் சொஹான், சமீம் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மட், மொஹமட் சயிபுத்தின், சொரிபுல் இஸ்லாம், மெஹ்தி ஹஸன், நசும் அஹ்மட்
மேலதிக வீரர்கள் – அமினுல் இஸ்லாம், ருபெல் ஹொசைன்
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…