கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 140ஆவது நீல நிறங்களின் சமரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்றைய தினம் (08) கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.
இதில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் பிரகாசித்த புனித தோமியர் கல்லூரி அணி, போட்டியில் முன்னிலை பெற்றுக்கொண்டது.
தோமியர் கல்லூரிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த கலன பெரேரா
உலகின் மிகவும் பழைமையான கிரிக்கெட் தொடரில் 2ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள…
மூன்று நாட்கள் கொண்ட இந்த மாபெரும் கிரிக்கெட் சமரின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் தோமியர் கல்லூரிக்காக கலன பெரேரா மற்றும் உமயங்க சுவாரிஸ் ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.
நேற்றைய ஆட்டநேர நிறைவின்போது 158 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்திருந்த நிலையில், இன்று (08) தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை தோமியர் கல்லூரி அணியினர் தொடர்ந்தனர்.
இன்றைய நாளினை ஆரம்பித்த தோமியர் கல்லூரி அணி, ஆரம்பத்தில் 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றம் கண்டது. இன்றைய நாளில் தோமியர் கல்லூரியின் முதல் விக்கெட்டாக ரவிந்து டி சில்வா 2 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து டில்மின் ரத்னாயக்கவின் விக்கெட்டையும் தோமியர் கல்லூரி அணி சிறிது நேரத்தில் பறிகொடுத்தது.
எனினும், தொடர்ந்து வந்த கலன பெரேரா – உமயங்க சுவாரிஸ் ஜோடி 8ஆவது விக்கெட்டுக்காக 91 ஓட்டங்களை இணைப்பாகப் பெற்று தோமியர் கல்லூரிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
அந்த அணிக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கலன பெரேரா 62 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் கவிந்து பத்திரனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் கலன பெரேரா ஒரு சிக்ஸர் மற்றும் 9 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 62 ஓட்டங்களை அவ்வணிக்காகப் பெற்றுக் கொடுத்தார்.
தொடர்ந்து இறுதி விக்கெட்டுக்காக தோமியர் கல்லூரியின் துடுப்பாட்ட இன்னிங்ஸை களத்தில் நின்ற உமயங்க சுவாரிஸ் மற்றும் புதிய துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷெனொன் பெர்னாண்டோ ஆகியோர் முன்னெடுத்துச் சென்றனர். இதில் அபாரமாக துடுப்பாடிய உமயங்க, அரைச்சதம் பெற்று வலுச்சேர்க்க போட்டி மதிய போசண இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது.
தோமியர் கல்லூரிக்காக சிறப்பான முறையில் ஓட்டங்களைக் குவித்த உமயங்ன சுவாரிஸ் 9 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதும், துரதிஷ்டவசமாக ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறினார்.
இவரது ஆட்டமிழப்புடன் புனித தோமியர் கல்லூரியின் இன்னிங்ஸ் நிறைவுக்கு வர அந்த அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இறுதி வீரராக களமிறங்கிய ஷெனொன் பெர்னாண்டோ 35 பந்துகளை எதிர்கொண்டு 5 ஓட்டங்களைப் பெற்றபோதும், உமயங்கவுடன் இணைந்து 36 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வலுச்சேர்த்தார்.
றோயல் கல்லூரி அணி சார்பில், பந்து வீச்சில் கமில் மிஷார மற்றும் கவிந்து பத்திரன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், கிஷான் பாலசூரிய 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் புகைப்படங்களைப் பார்வையிட…
தொடர்ந்து 138 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை றோயல் கல்லூரி அணி ஆரம்பித்தது.
முதலாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கமில் மிஷார மற்றும் இஸிவர திஸாநாயக்க ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச்சத இணைப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
எவ்வாறாயினும், நிதானமாக துடுப்பாடிய இஸிவர திஸாநாயக்கவின் விக்கெட்டை சலின் டி மெல் கைப்பற்றினார். அவர் 77 பந்துகளுக்கு முகங்கொடுத்து 20 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கலன பெரேராவின் பந்துவீச்சில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமில் மிஷார 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய அஹான் விக்ரமசிங்க (26), கவிந்து மதாரசிங்க (25) ஆகியோர சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுக்க றோயல் கல்லூரி அணி மீண்டும் நெருக்கடிக்கு முகங்கொடுத்தது.
எனினும், பாக்ய திஸாநாயக்க, கவிந்து பத்திரனவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, றோயல் கல்லூரி அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில், கவிந்து பத்தரத்ன 20 ஓட்டங்களையும், பாக்ய திஸாநாயக்க 16 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளனர். பந்துவீச்சில், கலன பெரேரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேநேரம், றோயல் கல்லூரி அணியானது, புனித தோமியர் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையைவிட 10 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Isiwara Dissanayake | b Kalana Perera | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Kamil Mishara | c Shalin De Mel b Shannon Fernando | 36 | 87 | 6 | 0 | 41.38 |
Ahan Sanchitha | lbw b Kalana Perera | 15 | 27 | 2 | 0 | 55.56 |
Pasindu Sooriyabandara | c Shalin De Mel b Kalana Perera | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Kavindu Madarasinghe | c Shalin De Mel b Shannon Fernando | 11 | 27 | 2 | 0 | 40.74 |
Bagya Dissanayake | c Dellon Peiris b Kalana Perera | 12 | 20 | 2 | 0 | 60.00 |
Tithira Weerasinghe | lbw b Kalana Perera | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Kavindu Pathirathne | lbw b Kalana Perera | 35 | 61 | 7 | 0 | 57.38 |
Kaushan Kulasooriya | c Shalin De Mel b Shannon Fernando | 28 | 47 | 5 | 0 | 59.57 |
Lahiru Madushanka | not out | 6 | 7 | 1 | 0 | 85.71 |
Gishan Balasuriya | c Shalin De Mel b Shannon Fernando | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Extras | 13 (b 4 , lb 4 , nb 4, w 1, pen 0) |
Total | 158/10 (48.3 Overs, RR: 3.26) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kalana Perera | 14 | 4 | 54 | 6 | 3.86 | |
Shalin De Mel | 3 | 0 | 12 | 0 | 4.00 | |
Kishan Munasinghe | 6 | 1 | 21 | 0 | 3.50 | |
Yohan Perera | 1 | 0 | 2 | 0 | 2.00 | |
Shannon Fernando | 15.3 | 8 | 27 | 4 | 1.76 | |
Dellon Peiris | 5 | 1 | 18 | 0 | 3.60 | |
Dilmin Rathnayake | 4 | 1 | 16 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sithara Hapuinna | c Kaushan Kulasooriya b Kamil Mishara | 14 | 13 | 3 | 0 | 107.69 |
Shalin De Mel | lbw b Kavindu Pathirathna | 21 | 18 | 5 | 0 | 116.67 |
Ryan Fernando | c & b Kamil Mishara | 60 | 66 | 9 | 1 | 90.91 |
Yohan Perera | c Kavindu Madarasinghe b Gishan Balasuriya | 49 | 90 | 8 | 0 | 54.44 |
Kishan Munasinghe | b Kamil Mishara | 8 | 18 | 1 | 0 | 44.44 |
Dellon Peiris | b Gishan Balasuriya | 4 | 16 | 0 | 0 | 25.00 |
Ravindu De Silva | b Lahiru Madushanka | 2 | 23 | 0 | 0 | 8.70 |
Dilmin Rathnayake | c Kavindu Madarasinghe b Kavindu Pathirathne | 3 | 29 | 0 | 0 | 10.34 |
Umayanga Suwaris | run out (Kavindu Madarasinghe) | 62 | 109 | 9 | 0 | 56.88 |
Kalana Perera | c Kaushan Kulasooriya b Kavindu Pathirathne | 62 | 59 | 9 | 1 | 105.08 |
Shannon Fernando | not out | 5 | 32 | 0 | 0 | 15.62 |
Extras | 6 (b 0 , lb 0 , nb 2, w 4, pen 0) |
Total | 296/10 (78.5 Overs, RR: 3.75) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kavindu Pathirathne | 16 | 1 | 83 | 3 | 5.19 | |
Lahiru Madushanka | 9 | 1 | 37 | 1 | 4.11 | |
Kamil Mishara | 19 | 5 | 70 | 3 | 3.68 | |
Gishan Balasuriya | 23 | 9 | 65 | 2 | 2.83 | |
Kaushan Kulasooriya | 10.5 | 2 | 26 | 0 | 2.48 | |
Tithira Weerasinghe | 1 | 0 | 14 | 0 | 14.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Isiwara Dissanayake | b Shalin De Mel | 20 | 77 | 2 | 0 | 25.97 |
Kamil Mishara | c Shalin De Mel b Kalana Perera | 34 | 58 | 6 | 0 | 58.62 |
Kavindu Madarasinghe | c Shalin De Mel b Shannon Fernando | 25 | 50 | 5 | 0 | 50.00 |
Ahan Sanchitha | c Sithara Hapuhinna b Kalana Perera | 26 | 50 | 3 | 0 | 52.00 |
Bagya Dissanayake | c & b Dellon Peiris | 21 | 96 | 2 | 0 | 21.88 |
Kavindu Pathirathne | c Dellon Peiris b Kalana Perera | 24 | 54 | 3 | 0 | 44.44 |
Pasindu Sooriyabandara | c Dellon Peiris b Yohan Perera | 67 | 160 | 9 | 0 | 41.88 |
Tithira Weerasinghe | c & b Dellon Peiris | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Kaushan Kulasooriya | c Ryan Fernando b Kishan Munasinghe | 14 | 37 | 3 | 0 | 37.84 |
Lahiru Madushanka | not out | 11 | 64 | 1 | 0 | 17.19 |
Gishan Balasuriya | b Yohan Perera | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 6 , lb 4 , nb 6, w 1, pen 0) |
Total | 259/10 (108.2 Overs, RR: 2.39) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kalana Perera | 30 | 6 | 102 | 3 | 3.40 | |
Shannon Fernando | 23 | 11 | 35 | 1 | 1.52 | |
Dellon Peiris | 23 | 6 | 53 | 2 | 2.30 | |
Kishan Munasinghe | 9 | 6 | 14 | 1 | 1.56 | |
Dilmin Rathnayake | 5 | 2 | 16 | 0 | 3.20 | |
Shalin De Mel | 11 | 5 | 12 | 1 | 1.09 | |
Yohan Perera | 5.2 | 0 | 15 | 2 | 2.88 | |
Umayanga Suwaris | 2 | 1 | 2 | 0 | 1.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sithara Hapuhinna | c Bagya Dissanayake b Kamil Mishara | 34 | 30 | 5 | 0 | 113.33 |
Shalin De Mel | not out | 67 | 55 | 10 | 1 | 121.82 |
Ryan Fernando | st Kavindu Madarasinghe b Gishan Balasuriya | 3 | 9 | 0 | 0 | 33.33 |
Yohan Perera | b Lahiru Madushanka | 2 | 17 | 0 | 0 | 11.76 |
Ravindu De Silva | not out | 13 | 9 | 1 | 0 | 144.44 |
Extras | 5 (b 4 , lb 1 , nb 0, w 0, pen 0) |
Total | 124/3 (20 Overs, RR: 6.2) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kavindu Pathirathne | 4 | 0 | 39 | 0 | 9.75 | |
Kamil Mishara | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Kaushan Kulasooriya | 2 | 0 | 16 | 0 | 8.00 | |
Lahiru Madushanka | 5 | 0 | 19 | 1 | 3.80 | |
Gishan Balasuriya | 5 | 1 | 23 | 1 | 4.60 |