Home Tamil புனித தோமியர் ஆதிக்கத்தை முறியடித்த றோயல் கல்லூரி
Roy Tho cricket

புனித தோமியர் ஆதிக்கத்தை முறியடித்த றோயல் கல்லூரி

202

புனித தோமியர் கல்லூரிக்கு எதிராக நீல நிறங்கள் சமரின் 44 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டியில் றோயல் கல்லூரி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

கொழும்பு SSC மைதானத்தில் இன்று (16) நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புனித தோமியர் கல்லூரியின் ஆதிக்கத்தை முறியடித்து றோயல் கல்லூரி மஸ்டாங் கிண்ணத்தைக் (Mustangs Trophy) கைப்பற்றியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக புனித தோமியர் கல்லூரி தொடர்ச்சியாக இந்த கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

பரபரப்புடன் நடந்த இந்தப் போட்டியில் 256 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பாடிய றோயல் கல்லூரி ஒருகட்டத்தில் தடுமாற்றம் கண்டபோது பின் வரிசையில் வந்த லஹிரு மதுஷங்க 17 பந்துகளில் ஒரு பௌண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

>>போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட…<<

றோயல் கல்லூரி சார்பில் ஆரம்ப வரிசையில் கவிந்து மதாரசிங்க (51), அஹன் சச்சித்த (67) மற்றும் கமில் மிஷார (68) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர்.

இதன் மூலம் அந்த அணி 48 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய புனித தோமியர் கல்லூரி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சித்தார ஹப்புஹின்ன மற்றும் முதல் வரிசையில் ரியான் பெர்னாண்டோ தலா 51 ஓட்டங்களை பெற்றனர். மத்திய வரிசையில் உமயங்க சுவாரிஸ் 89 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் 81 ஓட்டங்களை பெற்று வலுவான ஓட்டங்களை எட்ட உதவினார்.

போட்டியின் சுருக்கம்

Result


Royal College
259/9 (48)

S. Thomas’ College
255/6 (50)

Batsmen R B 4s 6s SR
Sithara Hapuhinna c Thevindu Senarathna b Sonal Amarasekara 51 66 7 0 77.27
Shalin De Mel b Lahiru Madushanka 11 20 2 0 55.00
Ryan Fernando c Thevindu Senarathna b Gishan Balasuriya 51 70 7 0 72.86
Ravindu De Silva lbw b Manula Perera 6 12 0 0 50.00
Umayanga Suwaris run out (Kavindu Madarasinghe) 81 89 8 0 91.01
Shamilka Wickramathilake run out (Ahan Sanchitha) 5 15 0 0 33.33
Kalana Perera not out 37 30 2 2 123.33
Dellon Peiris not out 0 0 0 0 0.00


Extras 13 (b 2 , lb 3 , nb 2, w 6, pen 0)
Total 255/6 (50 Overs, RR: 5.1)
Bowling O M R W Econ
Sadisha Rajapaksha 3 0 17 0 5.67
Kavindu Pathirathne 7 0 39 0 5.57
Lahiru Madushanka 9 0 54 1 6.00
Kaushan Kulasooriya 10 1 38 0 3.80
Sonal Amarasekara 10 0 60 1 6.00
Manula Perera 6 1 12 1 2.00
Gishan Balasuriya 5 0 30 0 6.00


Batsmen R B 4s 6s SR
Kavindu Pathirathne c Shalin De Mel b Kalana Perera 2 9 0 0 22.22
Kavindu Madarasinghe c Kishan Munasinghe b Kalana Perera 51 53 6 2 96.23
Ahan Sanchitha c Kishan Munasinghe b Yohan Perera 67 102 6 0 65.69
Kamil Mishara b Shannon Fernando 68 82 7 1 82.93
Thevindu Senarathna run out (Shamilka Wickramathilake) 0 1 0 0 0.00
Sonal Amarasekara run out (Ryan Fernando) 7 9 1 0 77.78
Kaushan Kulasooriya c Kishan Munasinghe b Shannon Fernando 2 5 0 0 40.00
Sadisha Rajapaksha st Sithara Hapuhinna b Shannon Fernando 3 6 0 0 50.00
Lahiru Madushanka not out 46 17 1 6 270.59
Manula Perera b Shannon Fernando 0 1 0 0 0.00
Gishan Balasuriya not out 0 3 0 0 0.00


Extras 13 (b 5 , lb 0 , nb 0, w 8, pen 0)
Total 259/9 (48 Overs, RR: 5.4)
Bowling O M R W Econ
Kalana Perera 9 0 78 2 8.67
Kishan Munasinghe 8 1 28 0 3.50
Shamilka Wickramathilake 2 0 18 0 9.00
Yohan Perera 8 0 41 1 5.12
Shannon Fernando 9 0 45 4 5.00
Dellon Peiris 5 0 19 0 3.80
Umayanga Suwaris 7 1 29 0 4.14



முடிவு – றோயல் கல்லூரி 1 விக்கெட்டால் வெற்றி