Home Tamil சமநிலை அடைந்த 143ஆவது நீலங்களின் சமர் பெரும் போட்டி

சமநிலை அடைந்த 143ஆவது நீலங்களின் சமர் பெரும் போட்டி

244

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமியர் கல்லூரிகள் அணிகள் இடையே 143ஆவது முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியானது சமநிலை அடைந்திருக்கின்றது.

அத்துடன் போட்டி சமநிலை அடைந்ததனை அடுத்து தொடரின் வெற்றிக்கிண்ணமான DS. சேனநாயக்க நினைவுக் கேடயத்தினை, 2019ஆம் ஆண்டு நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி அணி தொடர்ந்தும் தக்க வைத்திருக்கின்றது.

>> இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ள வெல்லாலகே

டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் அனுசரணையோடு ஒழுங்கு செய்யப்பட்ட மூன்று நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (21) ஆரம்பித்திருந்தது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு றோயல் கல்லூரி அணியின் தலைவர் கிஷான் பாலசூரிய முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, தோமியர் அணி வீரர்களுக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி அணி 106.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 242 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸிற்காக எடுத்தது. தோமியர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் விளாசிய செனேஷ் ஹெட்டியாராச்சி 55 ஓட்டங்களையும், சாருக்க பீரிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதேநேரம் கொழும்பு றோயல் கல்லூரி அணியின் பந்துவீச்சில் கிஷான் பாலசூரிய 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சந்தேஷ் ராமநாயக்க மற்றும் ரமிரு பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய கொழும்பு றோயல் கல்லூரி அணி 219 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் தமது முதல் இன்னிங்ஸினை நிறைவு செய்து கொண்டது. றோயல் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் உவிந்து வீரசேகர 9 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களைப் பெற்றார்.

>> ஜடேஜா விளையாடுவதில் சந்தேகம்! ; T20I தொடரை தவறவிடும் ராஹுல்!

அதேநேரம் புனித தோமியர் கல்லூரி அணியின் பந்துவீச்சில் கவிந்து டயஸ் 4 விக்கெட்டுக்களையும், கனிஷ்டன் குணரட்னம் 2 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.

இதனையடுத்து இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி அணி போட்டியின் ஆட்டநேரம் நிறைவுக்கு வரும் போது 142 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது, போட்டி சமநிலை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

புனித தோமியர் கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பில் ரயான் பெர்னான்டோ 74 ஓட்டங்களையும் எடுத்தார்.

மறுமுனையில் றோயல் கல்லூரி அணியின் பந்துவீச்சில் கிஷான் பாலசூரிய 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result

Match drawn

Royal College
219/8 (70.4)

S. Thomas’ College
242/10 (106.2) & 142/6 (64)

Batsmen R B 4s 6s SR
Senadhi Bulankulama lbw b Dasis Manchanayake 18 85 1 0 21.18
Janidu Abegoonawardena c & b Ramiru Perera 28 93 2 0 30.11
Dineth Gunawardena run out (Sadisha Rajapaksha) 12 25 1 0 48.00
RAYAN FERNANDO c Dasis Manchanayake b Gishan Balasuriya 18 31 1 0 58.06
MUIZZ NAUSHAN b Gishan Balasuriya 1 7 0 0 14.29
Senesh Hettiarachchi c & b Ramiru Perera 55 118 7 0 46.61
Charuka Peiris lbw b Sandesh Ramanayaka 51 151 5 0 33.77
Mahith Perera c Dasis Manchanayake b Gishan Balasuriya 33 83 2 0 39.76
Gunaratnam Caniston b Bulan Weerathunga 3 15 0 0 20.00
Akash Fernando c Sadisha Rajapaksha b Sandesh Ramanayaka 6 22 0 0 27.27
Kavindu Dais not out 0 8 0 0 0.00


Extras 17 (b 7 , lb 6 , nb 0, w 4, pen 0)
Total 242/10 (106.2 Overs, RR: 2.28)
Bowling O M R W Econ
Dan Poddiwela 14 3 36 0 2.57
Sandesh Ramanayaka 12 6 16 2 1.33
Gishan Balasuriya 31.2 11 56 3 1.79
Bulan Weerathunga 12 1 29 1 2.42
Sadisha Rajapaksha 21 4 34 0 1.62
Ramiru Perera 9 1 36 2 4.00
Dasis Manchanayake 7 0 22 1 3.14
Batsmen R B 4s 6s SR
Sanvidu Senartharachchi lbw b Kavindu Dais 1 8 0 0 12.50
Sineth Jayawardena c MUIZZ NAUSHAN b Janidu Abegoonawardena 32 38 6 0 84.21
Sadisha Rajapaksha c Senesh Hettiarachchi b Kavindu Dais 5 12 1 0 41.67
Uvindu Weerasekara c RAYAN FERNANDO b Kavindu Dais 66 109 9 0 60.55
Dasis Manchanayake lbw b Gunaratnam Caniston 17 31 1 0 54.84
Ramiru Perera b Akash Fernando 34 114 3 0 29.82
Nethil Panapitiya c Mahith Perera b Gunaratnam Caniston 27 73 0 0 36.99
Sandesh Ramanayaka c Charuka Peiris b Kavindu Dais 21 34 3 0 61.76
Gishan Balasuriya not out 1 7 0 0 14.29


Extras 15 (b 1 , lb 5 , nb 2, w 2, pen 5)
Total 219/8 (70.4 Overs, RR: 3.1)
Bowling O M R W Econ
Gunaratnam Caniston 23 1 67 2 2.91
Kavindu Dais 17.4 2 65 4 3.74
Akash Fernando 9 1 33 1 3.67
Janidu Abegoonawardena 4 0 6 1 1.50
Charuka Peiris 6 0 22 0 3.67
RAYAN FERNANDO 11 5 15 0 1.36


Batsmen R B 4s 6s SR
Senadhi Bulankulama c Sineth Jayawardena b Dan Poddiwela 2 10 0 0 20.00
Janidu Abegoonawardena c Uvindu Weerasekara b Gishan Balasuriya 7 38 1 0 18.42
Dineth Gunawardena b Gishan Balasuriya 1 43 0 0 2.33
RAYAN FERNANDO c Sadisha Rajapaksha b Gishan Balasuriya 74 117 10 0 63.25
MUIZZ NAUSHAN lbw b Sadisha Rajapaksha 11 71 0 0 15.49
Senesh Hettiarachchi c Sandesh Ramanayaka b Sadisha Rajapaksha 26 65 2 0 40.00
Mahith Perera not out 8 23 1 0 34.78
Gunaratnam Caniston not out 11 17 1 0 64.71


Extras 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 142/6 (64 Overs, RR: 2.22)
Bowling O M R W Econ
Dan Poddiwela 4 2 3 1 0.75
Sandesh Ramanayaka 3 3 0 0 0.00
Bulan Weerathunga 4 1 17 0 4.25
Sadisha Rajapaksha 18 7 30 2 1.67
Gishan Balasuriya 20 5 56 3 2.80
Ramiru Perera 13 2 32 0 2.46
Dasis Manchanayake 2 1 3 0 1.50



முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<