Home Tamil இந்த ஆண்டு சமநிலை அடைந்த நீல நிறங்களின் சமர்

இந்த ஆண்டு சமநிலை அடைந்த நீல நிறங்களின் சமர்

147

”நீல நிறங்களின் சமர்” (Battle of Blues) என அழைக்கப்படும் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமியர் கல்லூரி அணிகள் இடையிலான 141ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலையில் நிறைவடைந்திருக்கின்றது. 

நீல நிறங்களின் சமரில் கிண்ணத்தை கைப்பற்றப்போவது யார்?

இலங்கை பாடசாலை கிரிக்கெட் பெரும் சமர்களில் முக்கியத்துவம் வாய்ந்த …

உலகில் இடம்பெறுகின்ற இரண்டாவது பழம் பெரும் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக இருக்கின்ற, மூன்று நாட்கள் கொண்ட ”நீல நிறங்களின் சமர்” கிரிக்கெட் பெரும் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (12) கொழும்பு SSC மைதானத்தில் வைத்து 141ஆவது முறையாக ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற றோயல் கல்லூரி அணியின் தலைவர் தெவிந்து சேனாரத்ன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தோமியர் கல்லூரி அணிக்கு வழங்கினார். 

Photos – Day 1 | Day 2 | Day 3

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி அணியினர் 128.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தமது முதல் இன்னிங்ஸிற்காக 369 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். 

புனித தோமியர் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்டவீரராக வந்த செலின் டி மெல் 7 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 85 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடிய ஓட்டங்களை பதிவு செய்தார். இதேநேரம், அரைச்சதம் பெற்ற றயான் பெர்னாந்து 70 ஓட்டங்களையும் போதேஜூ 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

மறுமுனையில் றோயல் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல்பந்துவீச்சாளரான கிஷான் பாலசூரிய 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த றோயல் கல்லூரி அணியினர் ஆரம்பத்தில் தடுமாற்றம் ஒன்றினை காண்பித்த போதிலும் பின்வரிசை துடுப்பாட்டவீரர்களின் போராட்டத்தோடு 282 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது. 

றோயல் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் பின்வரிசை வீரராக வந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற டஸிஸ் மஞ்சநாயக்க, அரைச்சதத்துடன் 103 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் உடன் 53 ஓட்டங்களைப் பெற்றார். இதேநேரம், இசிவர திஸ்ஸநாயக்க 42 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

புனித தோமியர் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் யசிரு ரொட்ரிகோ, கிஷான் முனசிங்க மற்றும் சுவாரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கைவிடப்பட்ட இங்கிலாந்து – இலங்கை பயிற்சிப்போட்டி

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் …

தொடர்ந்து, 81 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி அணியினர் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் வரை துடுப்பாடி 127 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் போட்டி சமநிலை அடைந்தது. 

தோமியர் கல்லூரி அணியின் இந்த இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் போதேஜூ 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்திருந்தார். 

றோயல் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய கிஷான் பாலசூரிய 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தமுறைக்கான ”நீலங்களின் சமர்” கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலை அடைந்த காரணத்தினால் இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை கடந்த ஆண்டில், இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

Result

Match drawn

Royal College
282/8 (104.3)

S. Thomas’ College
369/10 (128.2) & 127/5 (48)

Batsmen R B 4s 6s SR
Dilmin Rathnayake lbw b Kavindu Pathirathna 23 36 2 0 63.89
Shalin De Mel c Kaushan Kulasooriya b Thevindu Senarathna 85 135 7 2 62.96
R de Silva st Kavindu Madarasinghe b Gishan Balasuriya 6 9 1 0 66.67
Ryan Fernando lbw b Dasis Manchanayake 70 145 9 0 48.28
Kishan Munasinghe b Kamil Mishara 0 1 0 0 0.00
G Botheju run out () 54 176 1 0 30.68
U Suwaris c Kavindu Pathirathna b L Madusanka 21 42 2 0 50.00
Maneesha Perera Rupasinghe run out () 25 80 1 0 31.25
Yasiru Rodrigo lbw b Kavindu Pathirathna 5 4 1 0 125.00
Thevin Bimsara Eriyagama st b Kamil Mishara 47 91 4 0 51.65
Caniston not out 10 52 0 0 19.23


Extras 23 (b 15 , lb 2 , nb 1, w 5, pen 0)
Total 369/10 (128.2 Overs, RR: 2.88)
Fall of Wickets 1-49 (14.2) Dilmin Rathnayake, 2-56 (17.1) R de Silva, 3-156 (42.6) Shalin De Mel, 4-156 (43.1) Kishan Munasinghe, 5-208 (62.1) Ryan Fernando, 6-244 (74.4) U Suwaris, 7-294 (100.3) Maneesha Perera Rupasinghe, 8-301 (102.1) Yasiru Rodrigo, 9-310 (106.4) G Botheju, 10-369 (128.2) Thevin Bimsara Eriyagama,

Bowling O M R W Econ
Kavindu Pathirathna 32 6 85 1 2.66
L Madusanka 13.2 0 31 1 2.35
Thevindu Senarathna 14.4 1 52 1 3.61
Gishan Balasuriya 23.2 3 68 2 2.93
Prashan kalhara 16 4 34 0 2.12
Kamil Mishara 21 4 55 1 2.62
Dasis Manchanayake 8 0 27 1 3.38
Batsmen R B 4s 6s SR
Kaushan Kulasooriya c Shalin De Mel b Kishan Munasinghe 31 110 3 0 28.18
Kamil Mishara c Shalin De Mel b Kishan Munasinghe 32 106 2 0 30.19
Kavindu Madarasinghe c G Botheju b Thevin Bimsara Eriyagama 23 43 2 0 53.49
Ahan Wickramasinghe c Dilmin Rathnayake b Caniston 24 40 3 0 60.00
Isiwara Dissanayake lbw b Yasiru Rodrigo 42 118 4 0 35.59
Kavindu Pathirathna b U Suwaris 8 37 0 0 21.62
Thevindu Senarathna c Yasiru Rodrigo b U Suwaris 8 9 2 0 88.89
Dasis Manchanayake not out 53 103 6 0 51.46
L Madusanka c G Botheju b Yasiru Rodrigo 29 57 5 0 50.88
Prashan kalhara not out 5 9 0 0 55.56


Extras 27 (b 10 , lb 0 , nb 8, w 4, pen 5)
Total 282/8 (104.3 Overs, RR: 2.7)
Fall of Wickets 1-61 (32.3) Kaushan Kulasooriya, 2-81 (40.3) Kamil Mishara, 3-104 (45.1) Kavindu Madarasinghe, 4-123 (53.3) Ahan Wickramasinghe, 5-169 (68.5) Kavindu Pathirathna, 6-177 (72.2) Thevindu Senarathna, 7-201 (80.4) Isiwara Dissanayake, 8-268 (102) L Madusanka,

Bowling O M R W Econ
Yasiru Rodrigo 26 8 52 2 2.00
Caniston 15 3 35 1 2.33
Thevin Bimsara Eriyagama 13.3 4 44 1 3.31
Kishan Munasinghe 19 6 38 2 2.00
Dilmin Rathnayake 9 0 32 0 3.56
U Suwaris 18 4 55 2 3.06
Shalin De Mel 4 0 11 0 2.75


Batsmen R B 4s 6s SR
Dilmin Rathnayake st Kavindu Madarasinghe b Gishan Balasuriya 22 36 2 1 61.11
Shalin De Mel c L Madusanka b Kamil Mishara 5 23 0 0 21.74
R de Silva lbw b Gishan Balasuriya 4 9 0 0 44.44
Ryan Fernando c L Madusanka b Gishan Balasuriya 34 66 5 0 51.52
G Botheju not out 36 77 5 0 46.75
U Suwaris c Prashan kalhara b Gishan Balasuriya 5 18 1 0 27.78
Kishan Munasinghe not out 16 60 1 0 26.67


Extras 5 (b 2 , lb 2 , nb 1, w 0, pen 0)
Total 127/5 (48 Overs, RR: 2.65)
Fall of Wickets 1-26 (9.1) Shalin De Mel, 2-10 (10.4) Dilmin Rathnayake, 3-31 (12.1) R de Silva, 4-76 (28.2) Ryan Fernando, 5-83 (32.5) U Suwaris,

Bowling O M R W Econ
Kavindu Pathirathna 6 0 22 0 3.67
Kamil Mishara 13 2 23 1 1.77
Gishan Balasuriya 18 5 50 4 2.78
Prashan kalhara 3 0 7 0 2.33
L Madusanka 3 1 6 0 2.00
Dasis Manchanayake 4 1 11 0 2.75
Thevindu Senarathna 1 0 4 0 4.00



முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. 

 மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…