ஐ.பி.எல் டி20 லீக்கில் விளையாடும் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல் டி20 லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்றான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை இழந்த பும்ரா
இங்கிலாந்து – தென்னாபிரிக்கா மற்றும் இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான…
கடந்த 2 தினங்களாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இலச்சினை திடீரென நீக்கப்பட்டது.
இது கிரிக்கெட் விமர்சகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த அணியின் சில வீரர்கள் தங்களது கவலையை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி புதிய இலச்சினையை இன்று (14) அறிமுகம் செய்துள்ளது.
புதிய இலச்சினையில் இடம்பெற்றுள்ள சிங்கம், RCB அணி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றும், துணிச்சலாக, அச்சமில்லாமல் அடுத்த தொடரை எதிர்நோக்கி இருப்பதையும் காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல், எளிமை, ஐ.பி.எல் அணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த அணி எனும் பெயரையும் அந்த இலச்சினை உணர்த்தி நிற்கின்றது.
இதனிடையே, RCB அணியின் புதிய இலச்சினை வெளியீடு குறித்து அந்த அணியின் தலைவர் சஞ்சீவ் சாவ்லா கூறுகையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுடன் எப்போதும் இருப்போம். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் புதிய இலச்சினை வடிவமைக்கப்பட்டது.
இம்முறை ஐ.பி.எல் தொடரில் துணிச்சலாகவும், உற்சாகமாகவும், கொண்டாட்டத்துடன் விளையாடுவதற்கும், உயிர்ப்புடன் நீடிக்கவும் இந்த இலச்சினையில் மாற்றம் செய்வது அவசியம் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
ஐந்து முறை பிளே ஓப் (play off) சுற்றுக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐ.பி.எல் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.
2018 ஆம் ஆண்டில் 6 ஆவது இடம், 2017, 2019 ஆகிய இரு வருடங்களிலும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்று கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே பெங்களூர் அணி விளையாடி வருகிறது.
இதனையடுத்து, அந்த அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் கேரி கேர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டார்கள்.
அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குனராக மைக் ஹஸ்ஸனும் நியமிக்கப்பட்டனர்.
இது இவ்வாறிருக்க, RCB அணியின் புதிய இலச்சினை, பெயர் மாற்றம் ஆகியவை குறித்து நேற்றைய தினம் சமூகவலைத்தளங்கள் வாயிலான செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும், அந்த அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு இது தொடர்பில் அறிவிக்கவில்லை எனவும், அது தனக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவர பாகிஸ்தான் சென்றுள்ள MCC
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் கொண்டு வரும் நோக்குடன், மெர்லிபோன்…
தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி டுவிட்டரில் கூறுகையில்,
RCB எனும் வார்த்தை திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து மாற்றப்பட்டது எனக்கு வியப்பாக இருந்தது. RCB அணியின் தலைவரான என்னிடம் கூட இதனைத் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வருட ஐ.பி.எல் போட்டியையாவது வெல்லும் முனைப்புடன் அந்த அணியானது புதிய வடிவிலான இலச்சினையொன்றை அறிமுகம் செய்துள்ளது. எனவே இந்தப் புதிய இலச்சினையாவது பெங்களூர் அணிக்கு ராசியாக அமையுமா என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<