கொல்கத்தாவில் இன்று (19) நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) ஏலத்தில் இலங்கை அணியைச் சேர்ந்த ஒரே ஒரு வீரராக சகலதுறை வீரர் இசுரு உதான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இதன்படி, 2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியால் தக்கவைக்கப்பட்ட லசித் மாலிங்கவுக்கு அடுத்தபடியாக விளையாடும் இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார்.
மும்பை அணியில் மீண்டும் விளையாடவுள்ள லசித் மாலிங்க
2020ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக்…..
ஐ.பி.எல். ஏலத்துக்கான பட்டியலில் இலங்கை அணியின் 14 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த போதும், இன்றைய தினத்தின் ஏல வாசிப்பின் போது, துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா மற்றும் சகலதுறை வீரர் இருசு உதான ஆகியோரின் பெயர்கள் மாத்திரமே எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதில், குசல் பெரேராவின் பெயர் இரண்டு தடவைகள் ஏல வாசிப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதும், அவரை எந்த அணியும் வாங்குவதற்கு முன்வரல்லை.
எனினும், வீரர்கள் ஏலத்தின் இறுதி வாசிப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இசுரு உதான அவருடைய அடிப்படை விலையான 50 இலட்சம் ரூபாவிற்கு (இந்திய ரூபாய்) றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்டார். (இலங்கை ரூபா பெறுமதியில் 127.5 இலட்சம் ரூபா)
இசுரு உதான சர்வதேசத்தில் நடைபெற்று வரும் பல்வேறு T20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றார். இறுதியாக, தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மாஷானி சுப்பர் லீக்கில், பார்ல் ரொக்ஸ் அணிக்காக விளையாடியிருந்ததுடன், அந்த அணி சம்பியனாகவும் மகுடம் சூடியிருந்தது.
அதேநேரம், இம்முறை ஏலத்தை பொருத்தவரை அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் அதிக விலைக்கு வாங்கப்பட்டதுடன், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை, 15.5 கோடி ரூபாவுக்கு வாங்கியிருந்தது.
இவருக்கு அடுத்தபடியாக மற்றுமொரு அவுஸ்திரேலிய வீரரான கிளேன் மெக்ஸ்வெல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 10.74 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்டார்.
IPL தொடருக்காக பதிவுசெய்துள்ள இலங்கையின் 39 வீரர்கள்!
இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள…..
இவர்களுக்கு அடுத்தபடியாக தென்னாபிரிக்க வீரர் க்ரிஸ் மொரிஸ் (10 கோடி) பெங்களூர் அணிக்காகவும், மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷெல்டன் கொட்ரல் (8.5 கோடி) கிங்ஸ் லெவன் பஞ்சாப், நெதன் கொல்டர்-நெயில் (8 கோடி) மும்பை இந்தியன்ஸ், ஷிம்ரொன் ஹெட்மையர் (7.75 கோடி) டெல்லி கெப்பிட்டல்ஸ், ப்யூஸ் சௌவ்லா (6.75 கோடி) சென்னை சுப்பர் கிங்ஸ், செம் கரன் (5.5 கோடி) சென்னை சுப்பர் கிங்ஸ், இயன் மோர்கன் (5.25 கோடி) கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ் (4.80 கோடி) டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காகவும் அதிக தொகை கொடுத்து அணிகளால் வாங்கப்பட்டிருந்தனர்.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க